அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
எம்.ஏ.கே.யின் ஆக்கம் அன்றாட நிகழ்வாகவும், நிதர்சனமாகவும் இருக்கிறது. அருமை.
"இந்தெ ஆம்புளெ ஒரே ஊட்டெக் கொடஞ்சிக்கிட்டு, சரியான பொண்ணஞ்சட்டியா ஈக்கிறாருமா...ஈனமாஈக்கிதுமா....அவ்வொளெ எல்லாம் பாருங்கெ வெளிநாட்டுக்கு போயி காசு,பணெத்தெ சம்பாதிச்சி சொத்துக்குமேலெ சொத்து வாங்கிப்போடுறாஹெ...பூரிப்பா ஈக்கிறாஹெ...இவரும் தான்ஈக்கிறாரு...வெருவாக்கெட்டுப்போயி.....இவரெ கலியாண முடிச்சி காலெமெல்லாம் கஷ்டம் தான்....ஏன் நசீபுஇப்படி?.....ஒருத்தருக்கும் வாணாமா இந்தெ பொல்லா நசீபு....ம்ஹும்...சொன்னாக்கோவம் மட்டும் பொசுக்குண்டுவந்துரும் இவ்வொளுக்கு அதுக்கு மட்டும் கொரச்சி இல்லெ ஒன்னு சொத்துபத்து உள்ளவரா ஈக்கனும், இல்லாட்டிபடிச்சி பட்டம் வாங்கினவரா ஈக்கனும்....ரெண்டும் இல்லாதவரை முடிச்சி உட்டுசனியனாப்போச்சு....சாக்காலமாப்போச்சும்மா....
" இதை கேட்கும் ஆண் வர்க்கத்தின் மேல் அணுகுண்டை வீசி அவர்களுக்கு கொஞ்சம், நெஞ்சம் இருக்கும்ஆசாபாசங்கள் என்னும் பசுமையான புல்,பூண்டு கூட முளைக்காமல் போய் விடும் அவர்கள் உள்ளத்தில்...
கடெசியிலெ இந்த பொம்புளெ வெளிநாடெப்பத்தி என்னா ரொம்ப (பீத்துறா) அளக்கிறாண்டு அங்கெ போயிபார்த்தா....அங்கெ உள்ளெ வண்டவாளம் தண்டாவாளமெல்லாம் புரிஞ்சி போவது.... ராத்திரியிலெ அவன்,அவன்போன்லெ இல்லாட்டி இன்டர்நெட்லெ பொண்டாட்டி கிட்டெ குசு,குசுண்டு பேசுறதும், கண்ணீர்வடிக்கிறதும்...இன்னொரு ரூம்லெ போயி பார்த்தா மூலெயிலெ உக்காந்துக்கிட்டு ஊர்லெ எழுதப்படிக்க தெரியாமெஇருந்தவன் இங்கெ வந்து பட்ட கஷ்டத்துலெ பெரிய கவிஞனா மாறிப்போய் ஏதோ எழுதுக்கிட்டு இருந்தவன் கிட்டபோயி பார்த்தா "பழகிப்போன பாலைவன வாழ்க்கையும்; பாழாய்ப்போன வாலிப வயசும்"ண்டு தலைப்பு போட்டுகவிதை எழுதிக்கிட்டு இருக்கிறான். என்னெத்தெ சொல்றது போங்கெ?
தெரிஞ்சு மிதிச்சாலும், தெரியாமெ மிதிச்சாலும் மிதிபட்ட எறும்புக்கு ரெண்டுமே ஒன்னுதான்" என்று சொல்வார்கள்.பாவம் வெளிநாடுகளில் மிதபட்ட எறும்பு போல் இங்கிருந்தால் கஃபீலின் கிடுக்குப்பிடி ஊருக்குப்போனால்பொண்டாட்டியின் நெத்தியடி என்று அல்லல்படும் மக்கள் ஏராளம்....மொளனமாய் உள்ளத்திற்குள் அவன் அழுகும்அழுகை கஃபீலுக்குத்தெரியப்போகிறதா? அல்லது அவன் மனைவி மக்களுக்குத்தெரியப்போகிறதா? நிச்சயமாகஇறைவனைத்தவிர வேறு எவரால் இயலும்?
இன்னொருத்தவன் கிட்டே போயி நலம் விசாரிச்சா அவன் சொல்றான்...இங்கே வந்து எல்லா சூழ்நிலையையும்ஏத்துக்கிட்டு கஷ்டப்பட்டு பழகிப்போனதாலெ எப்பொழுதாவது ஊர்லெயோ அல்லது இங்கேயோ ஏதாவதுசந்தோசமான நிகழ்ச்சி நமக்கு நடந்துச்சிண்டா அதை மனசு ஏத்துக்கிடாது ரொம்ப செரமப்படுண்டு சொல்றான்...இதுஎப்புடி ஈக்கிது?
"போதும் என்ற மனமே, பொன் செய்யும் மருந்து". என்று தமிழில் பழமொழி இருந்தாலும் எல்லாவற்றிற்கும்முன்னோடியாக மாமறை திருக்குர்'ஆன் "எல்லா சூழ்நிலையையும் மனதால் ஏற்றுக்கொண்டு நீ சந்தோசப்பட்டுஇறைவனுக்கு நன்றி செலுத்துபவனாக இரு" என்று சிம்பிளாகவும், தெள்ளத்தெளிவாகவும், ஆணித்தரமாகவும்அன்றே சொல்லி விட்டதை நாம் இங்கு சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்".
இதுதான் நமக்கு அல்லாஹ் நாடுனது. உருண்டாலும், புரண்டாலும் அதுதான் நமக்கு கிடைக்கும்...(அதற்காகமுயற்சி செய்யாமல் இருந்து விடக்கூடாது அது எந்த விசயமாக இருந்தாலும் சரி) என்று உறுதியானநம்பிக்கையுடன் நாம் நம் வாழ்வை தொடருவோமேயானால் எந்நாளும் நமக்கு பொன்நாளாகத்தான் அமையும்என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
எம்.ஏ.கே. உங்கள் கட்டுரைக்கு என் சிறு பின்னூட்டம் தான் இது (என்னா நக்கலாண்டு கேக்கிறியளா?)
இன்ஷா அல்லாஹ் வாய்ப்புகள் இருப்பின் இன்னும் அதிகம் எழுதலாம்.வஸ்ஸலாம்.
என்றும் அன்புடன்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது...
Thanks & Best Regards,
M.I. Naina Mohamed
Document Controller
(MCHF) Manifa Project
Kingdom of Saudi Arabia
É +966 3 5780160 Ext. 241
È+966 50 931 3398
¿: Naina.Mohamed@saipem.eni.it
Snamprogetti Saudi Arabia Ltd.
Sunday, 13 June 2010
Subscribe to:
Post Comments (Atom)
வலைத்தளத்திற்கு பெயர் இல்லையா...?
ReplyDeleteவந்தமைக்கு நன்றி ,நல்ல பெயராக சொல்லுங்கள்
ReplyDelete