Powered by Blogger.

Sunday 19 September, 2010

எனக்கு பிடித்த கவிதை

பத்துமாத
பாதுகாப்பு வளை-
கதறிக்கொண்டே கண்திறந்த...
பிறந்த தெரு என் தெருவா?
கால்களில் இறக்கை கட்டி-
கடலென்றும் காடென்றும்-
குளமென்றும் குட்டையென்றும்- குதித்துத் திறிந்த... வளர்ந்த தெரு என் தெருவா? பள்ளிக் கூடப் படிப்பும்- வகுப் பறைகளின் வசீகரமும்- வாத்தியார்களின் வாஞ்சையும்- என... பயின்ற தெரு என் தெருவா? அரும்பிய மீசையும்- தழும்பிய ஆசையும்- தவம் கிடந்த பார்வைகளும்- கத்துக்குட்டி கவிதைகளும்- என... களித்திருந்த தெரு என் தெருவா? பார்த்ததெல்லாம் அழகாகவும்-. படித்ததெல்லாம் தெளிவாகவும்-
நொடி நேர பார்வைக்கும்-
கோடி அர்த்தம் கண்ட-
கல்லூரிக் காலங்கள்...
கழிந்த தெரு என் தெருவா?
வாயிக்கும் வயிற்றிற்கும்-
சார்ந்தவர்களுக்கும் சேர்ந்தவளுக்கும்
என...
பிறந்த மண் துறந்து
பொருள் தேடி...
அலையும் தெரு என் தெருவா?
வைத்த காலம் முதல்
அழைத்த பெயரை-
மாமாவிலும் மச்சானிலும்
'என்னங்க'விலும் 'இந்தாங்க'விலும் வாப்பாவிலும் அப்பாவிலும்
தொலைத்து விட்டு-
மையத்து என்ற
பெயர் மட்டும் தாங்கி மாய்ந்து... அடங்கும் தெரு என் தெருவா? பொறு சகோதரா... மஹ்சரில் சந்திப்போம் ஒரே தெருவில்! -sabeer

3 comments:

  1. ஐயா ! நான் இங்கேயும் ஆஜர் ! உங்களுக்குப் பிடித்தது மட்டுமல்ல அனைத்து அதிராம்பட்டினார்களுக்கும் பிடித்தது எங்கு பதிந்தாலும் இதன் வீரியம் அப்படியே இருக்கும்.

    ReplyDelete
  2. எந்த ஒரு இரவும்
    விடியாமல் முடிவதில்லை
    எந்த ஒரு வனமும்
    மலராமல் உலர்வதில்லை!

    புன்னகைகளை விதைத்தவன்
    பூசல்களை அறுத்ததில்லை!
    பூக்களை ரசிப்பவன்
    புழுக்களை புசிப்பதில்லை

    ReplyDelete
  3. அன்பு ஹமீது,
    இதன் பின்னூட்டங்கள் கருத்துக்கு வலு சேர்க்கும். அ.நி. அனுமதிக்கும் என நினைக்கிறேன்.

    யாருக்கு சப்போர்ட்டாக எழுதப்பட்டதோ அவரிடம் இது இருப்பது மகிழ்ச்சி.

    ReplyDelete

About This Blog

shahulhameed
saudi

பிரபலமான இடுகைகள்

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP