Powered by Blogger.

Tuesday 20 July, 2010

கிரையோஜெனிக் ராக்கெட்

தண்ணீரை ஊற்றி ஒரு வாகனத்தை செலுத்த முடிமோ முடியாதோ - ஒரு ராக்கெட்டை இயங்கச் செய்ய முடியும். அதுதான் கிரையோஜெனிக் ராக்கெட். என்ன ஆரம்பமே குழப்பமாக உள்ளது என்று யோசனை பண்ணவேண்டாம் மேலும் படிங்கள் நீரை ஆக்சிஜன் வாயுவாகவும், ஹைட்ரஜன் வாயுவாகவும் தனித்தனியே பிரித்து அந்த வாயுக்களைப் பயன்படுத்தி ஒரு ராக்கெட்டை இயங்கச் செய்ய முடியும். அதுதான் கிரையோஜெனிக் ராக்கெட். இந்தியா முதல் தடவையாக உருவாக்கியுள்ள கிரையோஜெனிக் ராக்கெட் ஏப்ரல் 15-ம் தேதி புறப்பட்டு தடம் (ரோடு எங்கே என்று கேட்ககூடாது )மாறியது வேறுவிசயம் .ஆக்சிஜன் 2 மடங்கு ஹைட்ரஜன் வாயுவும் 1 பங்கு ஆக்சிஜன் வாயுவும் ஹைட்ரஜன் வாயு தீப்பற்றி எரியக்கூடியது. அவ்விதம் எரிவதற்கு ஆக்சிஜன் வாயு உதவும் இரு வாயுக்களையும் ராக்கெட்டில் பயன்படுத்தினால் உந்து திறன் (வேகம்) அதிகரிக்கும் அதிக எடை கொண்ட ராக்கெட்களை எளிதாக மேலே தூக்கி செல்லும் ஆனால் இந்த வாயுக்களைப் பயன்படுத்தும் ராக்கெட் எஞ்சின்களை உருவாக்குவதில் நமக்கு நிறையப் பிரச்னைகள் உள்ளது (இதில் ரஷ்யர்கள் பலே கில்லாடிகள்) என்ன பிரச்னைகள் அப்படி நம் வீட்டில் சமையல் காஸ் இருக்கிறது. அடுப்பைப் பற்ற வைத்ததும் காஸ் (வாயு) எரிகிறது. ஆனால், சிலிண்டருக்குள் இருப்பது காஸ் அல்ல. நல்ல அழுத்தத்தில் சமையல் வாயுவைத் திரவமாக்கி அந்தத் திரவத்தைத் தான் சிலிண்டரில் அடைத்திருக்கிறார்கள் ( இது நிறையபோருக்கு தெரியாது ) ஆனால், சிலிண்டருக்குள் இருப்பது காஸ் அல்ல நல்ல அழுத்தத்தில் சமையல் வாயுவைத் திரவமாக்கி அந்தத் திரவத்தைத் தான் சிலிண்டரில் அடைத்திருக்கிறார்கள். வாயு வடிவில் நமக்கு சிலிண்டர் அவருவதாக இருந்தால் வீடு கொள்ளாத அளவுக்குபெரிய சிலிண்டர் தேவைப்படும் அடுத்து மேட்டருக்கு வருவோம் சமையல் காஸ் போலவே ஆக்சிஜன், ஹைட்ரஜன் ஆகிய இரு வாயுக்களையும் தனித்தனியே திரவமாக்கி ஹைட்ரஜனைத் ஒரு டாங்கிலும் ஆக்சிஜன் ஒரு டாங்கிலும் அடைத்து ராக்கெட் எஞ்சினில் இரு வாயுக்களையும் சேர வைத்து எரியும்படி செய்யலாம். ஆனால் ஆக்சிஜன் வாயுவை வெறும் அழுத்தத்தைப் பிரயோகித்துத் திரவமாக்க அங்கு மைனஸ் 183 செல்சியஸ் குளிர்வித்தால் தான் அது திரவ நிலையை அடையும் அது போலவே ஹைட்ரஜன் வாயுவையும் மைனஸ் 253 செல்சியஸ் குளிர் படுத்த வேண்டும் (நம் ஊர் AMK அஹ்மத் காக ஐஸ் கம்பனி எல்லாம் ஜுஜுபி )கிரையோஜெனிக் என்றால் கடும் குளிர் என்று ஒரு அர்த்தாம் உண்டு அதன் காரணமாகவே கிரையோஜெனிக் எஞ்சின் என்றும், கிரையோஜெனிக் ராக்கெட் என்றும் பெயர் வைத்துள்ளார்கள் இந்த தொட்டிகள் மீது வெளிக்காற்று பட்டாலே போதும். இரண்டும் மிக விரைவில் ஆவியாகிவிடும் (ஆவி யாரையும் போய் பிடித்து வேப்பிலை அடிக்க சொல்லாது ) . இந்த தொட்டிகளை கடுமையான குளிரில் வைத்து இருக்க வேண்டும் ராக்கெட் செலுத்தப்படுவதற்குத் கொஞ்ச நேரதிற்கு முன்பு இந்த இரண்டு திரவங்களும் பொருத்தப்படும் இந்த திரவங்களையும் பயன்படுத்துகிற ராக்கெட் எஞ்சினை வடிவமைத்து உருவாக்குவதுதான் சிக்கலான விஷயம். ராக்கெட்டுக்குள் திரவ ஹைட்ரஜனும், திரவ ஆக்சிஜனும் அடங்கிய தொட்டிகளிலிருந்து இவை ஆவியாகிவிடாமல் குளிர்விக்க வேண்டும். அங்கிருந்து அவை இரண்டும் தனித்தனியே ராக்கெட்டின் எஞ்சின் பகுதிக்கு வந்து சேர வால்வுகள், ரெகுலேட்டர்கள், சுழல் பம்புகள் போன்ற உறுப்புகள் தேவை. சுழல் பம்பு நிமிஷத்துக்கு 42 ஆயிரம் தடவை சுழல்வதாக இருக்கும். இவையெல்லாம் விசேஷ கலப்பு உலோகத்தால் செய்யப்பட வேண்டும். ஏனெனில், கடும் குளிர் நிலையில் உலோகங்கள் ஒடிந்து விடாமல் இருக்க அதி நவீன கலப்பு உலகங்களினால் ஆனா உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படும் . ராக்கெட்டுக்குள் கடும் குளிர்விப்பு நிலையில் திரவ வடிவில் உள்ள ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் ராக்கெட்டின் எஞ்சின் பகுதிக்கு வந்ததும் வாயுவாக மாறி ஒன்று சேர்ந்து எரியும். அப்போது 3,000 டிகிரி செல்சியஸ்( வேகாத கோழி மட்டன் இவை எல்லாம் ஒரு செகடில் பஸ்பம் ) அளவுக்குக் கடும் வெப்பம் தோன்றும். ஆகவே, இந்த வெப்பத்தைத் தாங்கி நிற்க ராக்கெட் எஞ்சின் பகுதியும் விசேஷ கலப்பு உலோகத்தால் தயாரிக்கப்படுகிறது. விஷயத்துக்கு வருவோம் "அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்" (குர்ஆன் 6:125) அது என்ன விண்வெளியில் பயணம் செய்பவனின் மனதை போல் சுருங்கி இருக்குமாம் நாம் இந்த பூமி இன் இலுவிசையை தாண்டினால் உடல் உறுப்புக்கள் அனைத்தும் சுருங்கிவிடும் என்பதை சுமார் 1500 வருடங்களுக்கு முன்பே இறைவன் அறிவித்துள்ளான் மனிதர்களுக்கு விண்வெளியில் பயணம் செய்யகூடிய அறிவை வழங்கிவிட்டதாக இதை நாம் எடுத்து கொள்ளலாம் அல்லவா. நோன்பு வருகின்றது அல்லாஹ்வின் பொருத்ததை அடைவதற்காக ஜகாத்தின் மூலம் உங்களால் முடிந்த உதவிகளை வசதியற்ற உற்றார் உறவினர்களுக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் செய்திடுங்கள். ஆக்கம் - SHAHULHAMEED தம்மம்

Wednesday 7 July, 2010

நமக்குள் எழும் விடை தெரியா சில கேள்விகள்.....

வசதி வாய்ப்புகளும், அத்தியாவசிய தேவைகளும், அறிவியலின் நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும், அதன் பயன்பாடுகளும், மருத்துவ உலகம் மனிதனின் வாழ்நாளை நீடிப்பதற்காக அது எடுத்துக்கொண்ட ஆராய்ச்சிகளும், சிரமங்களும், சவால்களும் அதன் வெளிப்பாடும், பயன்பாடும் அதிகம் இல்லாத அக்கால மனிதர்களின் வாழ்வில் ஏற்பட்ட மனநிறைவும், அமைதியும், சந்தோசமும் விஞ்ஞான வளர்ச்சிகளெல்லாம் விண்ணை முட்டும் அளவுக்கு முன்னேறி இருக்கும் நவீன கணிப்பொறி காலமாக திகழும் நாம் வாழும் இக்காலத்தில் இருப்பதாக தெரியவில்லையே ஏன்? கிட்டத்தட்ட 80 அல்லது 90 வயதான நடமாடும் பெரியவர்களை ஒரு காலத்தில் அதிகம் பார்த்த நாம் இன்று அதுபோல் அதிகம் பார்க்க முடிவதில்லையே ஏன்? குள‌ங்க‌ளில் ம‌ழைகால‌த்தில் நிர‌ம்பும் நீர் தேக்க‌ம் இடையில் வ‌ரும் கோடைகாலத்தைதாண்டி அடுத்து வரும் ம‌ழை கால‌ம் வரை கொஞ்சமேனும் தேங்கி இருந்த‌து போல் இன்று இருப்பதில்லையே ஏன்? எவ்வ‌ள‌வோ தூர‌மான‌ சொந்த‌,ப‌ந்த‌ங்க‌ளை (தூர‌த்துச்சொந்த‌ம்) ஏதேதோ சொல்லி இழுத்துப்போட்டு சொந்த‌ம் கொண்டாடிய‌ ம‌னித‌ர்கள் அதிகம் இருந்த‌ அக்கால‌த்தில் இன்று நெருங்கிய‌ சொந்த‌ங்க‌ள் கூட‌ யாரோ/எவ‌ரோ, ஏனோ/தானோ என்று எவ்வித‌ இணைப்பும், பிணைப்பும் இல்லாம‌ல் இருந்து வ‌ருவ‌து ஏன்? அன்று பெரிய‌வ‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே வ‌ந்து அவ‌ர்க‌ளை கொஞ்ச‌ கால‌ம் படாத‌பாடு ப‌டுத்தி இறுதியில் ம‌ர‌ண‌ப்ப‌டுக்கையில் ப‌டுக்க‌ வைத்த‌ கொடிய‌ நோய்களாம் புற்று நோய், காச‌நோய், சர்க்கரை நோய் போன்ற‌ உயிர்க்கொல்லி நோய்க‌ள் இன்று வாலிப‌ர்க‌ளையும், சின்ன‌ஞ்சிறார்க‌ளையும் கூட‌ விட்டு வைக்காம‌ல் வாட்டி வ‌த‌க்கி வ‌ருவ‌து ஏன்? மார்க்க‌ விச‌ய‌மாக‌ இருந்தாலும் ச‌ரி, உல‌க‌ விச‌ய‌மாக‌ இருந்தாலும் ச‌ரி எத்த‌னையோ விழிப்புண‌ர்வு இய‌க்க‌ங்க‌ளும், கொள்கை கொண்ட‌ இய‌க்க‌ங்க‌ளும், ம‌றும‌ல‌ர்ச்சி இய‌க்க‌ங்க‌ளும் இன்று தெரு தோறும், ஊர் தோறும் இய‌ங்கி வ‌ந்தாலும் அன்று விர‌ல் விட்டு எண்ண‌க்கூடிய‌ அள‌வில் இருந்து வ‌ந்த‌ இய‌க்க‌ங்களால் ம‌க்க‌ளுக்கு ஏற்ப‌டாது இருந்த குழ‌ப்ப‌ங்க‌ளும், ச‌ண்டை ச‌ச்ச‌ர‌வுக‌ளும், நீயா‍? நானா? போட்டிக‌ளும் இன்று எல்லா இட‌ங்க‌ளிலும் ம‌லிந்து காண‌ப்ப‌டுவ‌து ஏன்? குறைந்த‌ வ‌ருவாயில் அதிக‌மான‌ தேவைக‌ளை நிறைவேற்றிக்கொண்ட‌ அக்கால‌ ம‌னித‌ர்க‌ள் இன்று அதிக‌மான‌ வ‌ருவாய் இருந்தும் குறைவான‌ தேவைக‌ளையே நிறைவேற்ற‌க்கூடிய‌வ‌ர்க‌ளாக‌ இருந்து வ‌ருவ‌து ஏன்? எத்த‌னையோ ல‌ட்சோப‌ ல‌ட்ச‌ம் வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் இறைவ‌னால் உருவாக்க‌ப்ப‌ட்ட‌ இப்பூமிப்ப‌ந்தின் தென் கோடியில் இருக்கும் ப‌னிப்போர்வை போர்த்திய‌ பிர‌தேசமாம் அண்டார்டிக்கா உல‌க‌ வெப்ப‌ம‌ய‌மாத‌ல் மூல‌ம் சமீப‌ கால‌த்தில் ம‌ட்டும் உருகி வ‌ருவ‌த‌ன் காரண‌ம் என்ன‌? ப‌ல‌கோடி வ‌ருட‌ங்க‌ள் சூரிய‌னின் க‌திர்க‌ளை த‌ன்ன‌க‌த்தே ஈர்த்துக்கொண்டு அதை அப்படியே கிர‌கித்து வ‌ரும் உல‌க‌ம் இன்று ம‌ட்டும் அத‌ன் வெப்ப‌ம் அதிக‌ரித்து உல‌கை ப‌ய‌முறுத்தி வ‌ருவ‌து ஏன்? த‌ன் சொத்தின் ம‌திப்பு உலக ப‌ண‌ ம‌திப்பில் எத்த‌னை பூஜ்ஜிய‌ங்க‌ள் இருக்கும் என்று கூட‌ யூகிக்க‌ முடியாத‌ அள‌வுக்கு பெரும் செல்வ‌ங்க‌ளைக்கொண்டு வாழ்ந்து வரும் ப‌ண‌க்கார‌ர்க‌ள் ம‌த்தியில் ஒரு பூஜ்ஜியம் கூட இல்லாமல் அதற்காக அன்றாட‌ம் அல்லோல‌ப்ப‌டும் கோடான‌,கோடி ம‌க்க‌ள் இன்று உலகமெங்கும் இருந்து வ‌ருவ‌து ஏன்? எதிர்பாராம‌ல் வந்து பேரழிவை ஏற்படுத்தும் இய‌ற்கை சீற்ற‌ங்க‌ளாலும், ஆங்காங்கே நடக்கும் விமான‌ம், ர‌யில் மற்றும் த‌ரை வ‌ழி வாக‌ன‌ விப‌த்துக்க‌ளால் ம‌க்க‌ள் அன்றாடம் கொத்துக்கொத்தாக‌ கொல்ல‌ப்ப‌டுவ‌து ஏன்? கிராம‌ வாழ்க்கை ம‌ற்றும் அத‌ன் இய‌ற்கையை அனுப‌விக்க‌ ம‌ற‌ந்து ந‌க‌ர‌த்தின் மேல் தீராத‌ மோக‌ம் கொண்டு சுகாதார‌ம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அங்கு ம‌ட்டும் ம‌க்க‌ள் குவிந்து வ‌ருவ‌து ஏன்? ப‌சுமையான‌ வ‌ய‌ல்வெளிக‌ளும், அத‌ன் மேல் ப‌ட‌ர்ந்திருக்கும் வெண் கொக்குக‌ளும் இன்று த‌ரிசு நில‌மாய் ஆகி அதன் மேல் இன்று வ‌ணிக‌ நிறுவ‌ங்க‌ளும், குடியிருப்புக‌ளும் அதிகம் க‌ட்ட‌ப்ப‌ட்டு வ‌ருவ‌து ஏன்? வ‌ய‌ல் வெளியில் ம‌ட்டுமே விளைவிக்க‌ முடியும் நெல்ம‌ணியை தொழிற்சாலையில் இய‌ந்திர‌ம் கொண்டு உற்ப‌த்தி செய்து ம‌னித‌னின் உண‌வுத்தேவையை நிறைவேற்ற‌ முடியுமா? ப‌ல‌ ந‌ல்ல, நல்ல‌ திட்ட‌ங்க‌ளை ம‌க்க‌ளுக்காக‌ அவ‌ர்க‌ளின் ந‌ல‌ன்க‌ளுக்காக‌ பொது ந‌ல‌ நோக்கில் போட்டி போட்டுக்கொண்டு நிரைவேற்றி ச‌ரித்திர‌த்திலும் இட‌ம் பிடித்து எல்லோராலும் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட‌ ப‌ல‌ ந‌ல்ல‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ள் இன்று இல்லாம‌ல் போன‌து ஏன்? அன்று ஆட‌ம்ப‌ர‌ப்பொருளாக‌ தூர‌ம் வைத்து பார்த்து பேச‌ப்ப‌ட்ட‌ கார், இரு ச‌க்க‌ர‌ வாக‌ன‌ம், தொலைக்காட்சி, தொலைபேசி, மின் அடுப்பு, மின் ச‌மைப்பான், கேஸ் அடுப்பு மற்றும் குளிர்சாத‌ன‌ப்பெட்டி போன்ற‌ பொருட்க‌ள் எல்லாம் அன்றாட‌ம் ப‌ய‌ன்ப‌டுத்தாம‌ல் அக்கால‌ ம‌னித‌ர்க‌ளின் வாழ்க்கை சுமூக‌மாக‌ நக‌ர‌த்தான் செய்த‌து. ஆனால் இன்று இவைக‌ளெல்லாம் அத்தியாவ‌சிய‌ப்பொருட்க‌ளாக‌ மாறி அது இல்லாம‌ல் வாழ்க்கை ச‌க்க‌ர‌த்தை ந‌க‌ர்த்த‌ முடியாது என்று ஆகிப்போன‌து ஏன்? இய‌ற்கையாய் உருவாகி ம‌னித‌னுக்கு ப‌ய‌ன் தரும் காய்க‌றிக‌ளும், ப‌ழ‌வ‌ர்க்க‌மும், வில‌ங்குக‌ளும் இன்று ம‌ர‌ப‌ணு மூல‌ம் உருவாக்க‌ப்ப‌ட்டு ம‌க்க‌ளின் ப‌ய‌ன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சிப்பது ஏன்‌? ஒரு ப‌க்க‌ம் நவீன‌ ஆயுத‌ங்க‌ள் மூல‌ம் போர் என்று சொல்லி பொது ஜ‌ன‌ங்க‌ளை கொத்து, கொத்தாக‌ கொன்று குவித்து ம‌றுப‌க்க‌ம் விமான‌ங்க‌ள் மூல‌ம் ம‌னிதாபிமான‌ அடிப்ப‌டை என்று சொல்லி உத‌விப்பொருட்களை அனுப்பி வைப்பது ஏன்? உல‌கில் வாக‌ன‌ உற்ப‌த்தியை அதிக‌ரித்து அத‌ன் ச‌ந்தை மூல‌ம் அதிக‌ லாப‌ம் ஈட்டி, அவ்வாக‌ன‌த்தை ந‌டுத்த‌ர‌ ம‌னித‌னும், பாம‌ர‌னும் ப‌ய‌ன்ப‌டுத்தும் வ‌ண்ண‌ம் எல்லா வ‌ச‌திக‌ளையும் ஏற்ப‌டுத்திக்கொடுத்து அதை இய‌க்குவ‌த‌ற்கு தேவையான எரிபொருளைப்பெற பெட்ரோலிய‌ உற்ப‌த்தி மூல‌ம் உல‌க‌ப்ப‌ந்தை துளையிட்டு உறிஞ்சி எடுத்து பிற‌கு உல‌க‌ம் வெப்ப‌ம‌ய‌மாகி வ‌ருகிற‌து என்று கூக்குர‌லிட்டு கூட்ட‌ம் போடுவ‌து ஏன்? இவை யாவும் ந‌ம்மைப்ப‌டைத்த‌ இறைவ‌னுக்கே வெளிச்ச‌ம். என்னுள் தோன்றிய‌ இக்கேள்விக்க‌ணைக‌ள் ச‌ரியா? அல்ல‌து த‌வ‌றா? என்று தெரிய‌வில்லை. அவ்வ‌ப்பொழுது தோன்றும் இது போன்ற‌ கேள்விக‌ள் உங்க‌ளுக்கும் தோன்றி இருப்பின் நீங்க‌ள் பின்னூட்ட‌ம் மூல‌மாக‌வோ அல்ல‌து த‌னிக்க‌ட்டுரை மூல‌மாக‌வோ ப‌கிர்ந்து கொள்ள‌லாம். இன்னும் தொட‌ரும் விடைதெரியா ந‌ம் கேள்விக‌ள் இன்ஷா அல்லாஹ். வ‌ஸ்ஸ‌லாம்.. மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து ச‌வுதியிலிருந்து.

Sunday 4 July, 2010

ஈகோ எனும் "சொந்த ஆப்பு"

ஈகோ எனும் "சொந்த ஆப்பு" ஈகோ எனும் "சொந்த ஆப்பு"கொஞ்சம் விலா வாரியாக எழுத இது ஒன்றும் அவ்வளவு சின்ன சப்ஜெக்ட் அல்ல. இதில் குறிப்புகள் யார் கொடுத்தார்கள் என்று எழுதினால் அவர் யார் ? அவரது பின்புலம் குறித்து 100 வார்த்தைக்கு மிகாமல் எழுத சொல்வீர்கள் அது சரி அது என்ன விலா வாரி...தெரிந்தவர்கள் 100 வார்த்தக்கு....எப்போது நாம் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க 'ஜல்புல்'வேலை செய்கிறொமொ அப்பவே நமக்கு உரிய "ஆப்பை' தீட்ட ஆரம்பித்து விடுகிறோம். சரி இங்கு ஈகொ எங்கு வந்தது....ஆம் நம்மை கவனிக்க நாம் பிரயத்தனம் செய்கிறோமே அதுதான் அந்த சனியன். இது சின்ன வயதில் "எம்புள்ளெ அந்த மாதிரியான புள்ளெ இல்லே' என்று மனித தவறுகள் மறைக்கபடுவதிலிருந்து மரணத்தின் தருவாயில் "எப்போ என் சொல்லு கேட்காமெ பொண்டாட்டி சொல்லு கேட்டானோ அவன் என் வீட்டு நெலப்படி [ இன்னும் நெலப்படி வைத்து கட்டுகிறார்களா?] மிதிக்க கூடாது " எனும் வைராக்கியம் வரை தொடர்கிறது.இதற்க்கு காரணம் நமக்குரிய இமேஜ் ' நிரந்தரம்"எ எனும் தப்பான கணக்குதான். அப்படியெல்லாம் அது நிரந்தரம் இல்லை என்பதற்க்கு உதாரணம் இன்றைக்கு நம் தமிழ்நாட்டின் கல்வி மேம்பாட்டில் பெரும் மாறுதலை செய்த காமராஜரின் படத்தை காண்பித்து யார் என்று கேட்டால் 'தெலுங்கு சீரியலில் நடிக்கிரவரா? " என மாணவர்கள் கேட்கலாம் [ இமேஜ் நிரந்தரம்???]கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும் ஈகோ நாளடைவில் இரத்த உறவுகளை முறித்துவிடும் உயிர்க்கொல்லி என்பது நிறைய பேருக்கு தெரியாமலேயே இறந்துவிடுகிறார்கள். பெற்றோர்களும், உடன்பிறப்புகளையும் தேர்தெடுக்கும் அதிகாரம் நம்மிடம் இல்லை. நண்பனையும் , மனைவியையும் தேர்தெடுப்பதில் வேண்டுமானால் சாய்ஸ் உண்டு...அதனால்தான் இப்போது "சாய்ஸில்" செய்த தவறுக்கு நம் ஊரில் அதிகம் விவாகரத்துகள் மலிந்துவிட்டனவா?நம் ஊரில் நான் அதிகம் பார்த்த ஈகோ:வெளிநாட்டிலிருந்து வந்த என்னெ என் வீட்டில் வந்து விசாரிக்கலேநான் ஆஸ்பத்திரியில் இருக்கும்போது ஹார்லிக்ஸ்/ பழம் வாங்கி வந்து பார்க்களெநான் மாப்பிள்ளை வீட்டுக்காரன் , எனக்கு சரியான மரியாதை கொடுக்கனும்.நாங்க வசதியான குடும்பம் ...அவங்க அப்படி இல்லே.எங்க வீட்டுக்கு பொம்பலெ கூப்பாடு இல்லெ.பயணம் போகும்போது சொல்லிட்டு போகலெஇதில் சில விசயங்கள் பாசம் சார்ந்து இருந்தாலும் பெரும்பாலும் இது ஈகோவின் அடிப்படையிலேயே இயங்குகிறது. என்று [ZEN ]ஜென் தத்துவம் சொல்கிறது..இதை சரியாக உணர்ந்தவர்கள் ஆப்பரேசனுக்கு நுழையுமுன் ஸ்ட்ரெச்சரில் வைத்துகொண்டு.."உங்களுக்கு இதற்குமுன் ஏதாவது ஆப்பரேஷன் நடந்து இருக்கிறதா?..பல் கட்டியதா? அலர்ஜி இருக்கிறதா என கேட்கும்போதும் . அனெஸ்தெசிஸ்ட் "ஒன்னு , ரெண்டு” எண்ணுங்க சொல்லும்போது லேசாக தெரியும் "நாம் தனியானவன் தான் " என்றுஆனால் வார்டில் இருந்து கொண்டே குற்றப்பத்திரிக்கை வாசிப்பவர்களுக்குதான் இன்னும் ஒரு சரியான "ஈகோ மீட்டர்' கண்டுபிடிக்க மருத்துவ துறை தவறிவிட்டது.ஈகோ இப்படியெல்லாம் வளர்ந்து இப்போது சினிமாவின் ஆதிக்கத்தாலும் "நான் இந்த மாவட்டம் , நீ அந்த மாவட்டம் என்று வியாபித்து [ இந்த தமிழ் பயன்படுத்தி நாளாகிவிட்டது] இப்போது நம் ஊர்போன்ற இஸ்லாமிய மதரஸாக்கள் / பள்ளிவாசல் / நிறைந்த இடங்களில் "தெரு" 'இயக்கம்' "குடும்பம்' 'இனிசியல்" என்று புற்றுப்பிடித்திருக்கிறது.வறுமையும் , நோயும் ஈகோவை அழிக்கும் ஆயுதம்..இதில் கடுமை இருக்கிறது..நாமாக உணர்ந்து மாற்றிக்கொண்டால் எல்லோருக்கும் ஒறே மாதிரி நீதி வழங்கும் இறைவனின் கருணை இருக்கிறது.மற்றவர்களை மன்னித்து பாருங்கள் ...அதில் உள்ள சந்தோசமே தனி. ZAKIR HUSSAIN

About This Blog

shahulhameed
saudi

பிரபலமான இடுகைகள்

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP