Powered by Blogger.

Saturday 22 January, 2011

நமக்கு ஏன் இன்னும் புரியவில்லை மனித உயிர் விலைமதிக்க முடியாதவை என்று

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அழைக்கும்,

இந்த வருட துவக்க முதல் இரண்டு நாட்களில் நடந்த இரண்டு விபத்துக்களில் 26 உயிர் அநியாயமாக பறிக்கப்பட்டன. பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகின்றனர். சமீபகாலமாக விபத்துக்கள் அதிக அளவில் நடக்கின்றன.

இன்றைக்கு TV நியூஸ் பார்த்தல் செய்தி வாசிப்பவர் தன் பெயரை சொல்லிவிட்டு அடுத்தபடியாக சொல்வது விபத்து பற்றிய செய்தியாகத்தான் பெரும்பாலும் இருக்கின்றன


இதற்கு காரணம் வாகனங்கள் அதிக அளவில் வந்து விட்டது அதுவும் நவீனமாக தார்சாலைகளும் வாகனங்களுக்கு சளைக்காமல் நவினப்படுத்தபட்டுள்ளது ஆனால் வாகனங்களை இயக்குபவர்கள் (ஓட்டுனர்கள்) இன்னும் நவினப்படுத்தப்படவில்லை அவர்கள் வாகனங்களை செலுத்துவதில் உள்ள நிலை மிக அக்கறையற்றதாகவே உள்ளது.


தமிழகத்தில் வருடத்திற்கு 65 ஆயிரம் சாலை விபத்துக்கள் நடக்கின்றன இதில் 18 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் வரை மரணம் அடைவதாக புள்ளி விபரம் சொல்கின்றது, இந்த புள்ளிவிபரத்தில் வராமல் எத்தனை எத்தனையோ மரணங்கள் நிகழ்கின்றன.


ஐக்கிய நாடுகளின் துனைசபைகள் பலவாறாக நமக்கு வருத்தம் மட்டும் தெரிவித்து வருகின்றன ஆனால் உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை.


நாம் இந்த விசயத்தில் மிக வேகமா ( விபத்துக்கள் ) முன்னேறி வருகின்றோம் என்பது வேதனையான உண்மை இது இன்னும் புரியவேண்டிய பலருக்கு புரிந்த பாடில்லை.


நம் அன்டை நாடான சீன நம்மை விட அதிக மக்கள் தொகையும் நம்மைவிட அதிக அளவில் வாகனமும் உள்ள நாடு நம்மை விட விபத்துக்கள் குறைவாக உள்ள நாடாக திகழ்கின்றது .


நாமெல்லாம் முன்பு உதாரணங்கள் காட்டுவதற்கு ஜப்பான் அமெரிக்கா சிங்கப்பூர் போன்ற நாடுகளை தான் உதாரணம் காட்டிவந்தோம் சமிபகாலமாக சீனவை உதாரணம் காட்டும் அளவுக்கு சீன வளர்ந்து வருகின்றது. இதற்க்கு காரணம் அங்கு மனித உயிர்கள் மதிக்கப்படுகின்றன.


அங்கு உள்ள ஆட்சியாளர்கள் நடக்கும் விபத்துக்களுக்கு வருத்தம் தெரிவிப்பதுடன் நின்றுவிடாமல் அதை எந்த வகையில் தடுக்கலாம் என்று திட்டம் போட்டு செயல் படுத்துகிறார்கள் அதற்க்கு அங்கு உள்ள மக்களும் ஒத்துளைகிறார்கள் திட்டங்கள் வெற்றி பெறுகின்றன ,


நமது நாட்டில் திட்டமும் சரி இல்லை நாட்டு மக்களும் திட்டங்களுக்கு சரிவர ஒத்துழைப்பு கொடுப்பதில்லை, ஒரு விபத்தினை காண நேர்ந்தால் அந்த நேரத்தில் மட்டும் வருந்தி விட்டு அடுத்த நிமிடம் அதைநாம் மறந்து விடுகின்றோம் இந்த நிலை முதலில் மாறவேண்டும். இன்று யாருக்கோ நேர்ந்த சம்மவம் நாளை நமக்கே நேரலாம் என்ற எண்ணம் நம் சிந்தனைக்கு வரவேண்டும். அனைவரும் சிந்தித்து இவ்வுலகில் வாழும் சிறிய காலத்தில் நடைப்பெறும் விபத்துக்களுக்கு நாம் காரணமாகாமல் நம் வாழ்க்கையை சிறப்பாக்கிக்கொள்ளலாமே.

சமீபகாலமாக நம் அதிரைபட்டினத்தில் நிகழும் விபத்துக்கள் கடல் தாண்டி இருக்கும் நம் மனதை அதிக அளவில் பாதிக்கின்றது என்றால் விபத்தில் இறக்கும் நபரின் குடும்பம் எந்த அளவிற்கு பாதிக்கப்படும் என்பதனை வாகன ஓட்டிகள் கொஞ்சம் சிந்தித்து பார்க்கவேண்டும்.


விபத்தினை தடுக்க சில யோசனைகளை


1 நாம் எங்கு செல்வதாக இருந்தாலும் கடைசி நேரத்தில் அவசராவசரமாக கிளம்பாமல் சற்று முன்பே பயணத்தை அமைத்துக்கொள்ளவேண்டும்.


2 இரவு நேர பயணங்களை தவிர்த்துக்கொள்ளவேண்டும் ,அப்படி தவிர்க்க முடியவில்லை என்றால் இரவு 2 மணியில் இருந்து அதிகாலை 6 மணிவரை வாகன ஓட்டிகளுக்கு ஓய்வு கொடுத்து விடவேண்டும் இந்த நேரங்களில்தான் அதிக அளவில் விபத்துக்கள் நடைபெறுகின்றன.


3 மெதுவாக சென்று ஒரு இலக்கை அடைவதற்கும் வேகமாக சென்று அதே இலக்கை அடைவதற்கும் ஒருமணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் தான் வித்தியாசப்படும் நாம் மிதமான வேகத்தில் சென்று இலக்கை அடைவதே புத்திசாலித்தனம். வேகமாக சென்று விபத்தில் சிக்கினால் நாம் சென்று அடையும் இலக்கு வேறு இடமாக இருக்கும் .


4 நாம் ஒவ்வொரு நிமிடமும் மரணத்தை நினைத்து இருந்தால் நம் வாழ்கையில் நடைமுறையில் நிதானமும் நேர்மையும் வரும் .


5 நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக சீட் பெல்ட் அணியவேண்டும். இருசக்கர செலுத்திகள் தலை கவசம் அணியவேண்டும்.


6. டிரைவருக்கு போதுமான அளவு தூக்கம் இருக்கிறதா என்பதை உறுதி செய்யவேண்டும்...முதலாளியிடம் எப்படி சொல்வது என டிரைவர் தூக்கத்துடன் போராடினால்...பயணிகள் ஆஸ்பத்திரி பில்லுடன் போராட வேண்டி வரும்.

7. தூர பயணங்களில் சேரும் நேரம் திட்டமிடுதலால் நேரம் தாமதமாகிற மாதிரி ஒரு கற்பனை இருக்கும்...அழுத்தி ஒட்டினால் அனாவிசய பெட்ரோலும்..அனாவிசயமாக உங்கள் அட்ரினல் சுரப்பியும் வீனாகும்.

8. பேச்சுத்துணைக்கு 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் போவது ஆடு தன்னாலேயே கசாப்பு கடையின் கத்தியில் கழுத்தை வைத்துகொள்ளும் முயற்சி.
பகல் பயணத்தில் டிரைவர்கள் மோர் தயிர் தவிர்ப்பது நல்லது..தூக்கம் காரண்டி கார்டுடன் வந்து நிற்கும்.

9. தலையில் மூலிகை எண்ணெய் , நல்லெண்ணை தலைக்கு தேய்ப்பது தவிர்ப்பது நல்லது...கார் ஒட்டும்போது யாரோ மடியில் படுக்கவைத்து தலை கோதிவிடுகிறமாதிரி ஒரு ப்ரம்மை

வேகமாக ஓட்ட யாரும் எந்த சர்டிபிகேட்டும் தருவதில்லை..டெத் சர்டிபிகெட்டை தவிர


- உபயம் : ZAKIR HUSAAIN


அசத்தல் காக்காவின் பரிந்துரையை வாசித்து யோசித்து ஓட்ட வேண்டும்...


10. -----------------------------------------------


11. ----------------------------------------------


12. -----------------------------------------------


13. -----------------------------------------------

14. ----------------------------------------------



மேலே விடுபட்டவைகளை இங்கு பின்னுட்டம் இடும் சகோதர வாசகர்கள் தங்கள் நல் ஆலோசனைகளை வழங்கி நிவர்த்தி செய்யவும்


-- S HAMEED
     DAMMAM

4 comments:

  1. ஓட்டும்போது உறங்கினால் வாகனம் பள்ளம் நோக்கியும் இறங்கிடுமாமே நிஜமா !?

    ReplyDelete
  2. என்ன காக்கா கருத்தைச் சொல்ல வரலாம்னா உண்டியலில் போட்டாகிவிட்டது இனி உரியவர் திறக்கும் வரை காத்திருக்கும்னு வருது !

    ReplyDelete
  3. சலாம்
    அய்யா, மனித உயிர் மதிப்பற்றது இது எல்லோருக்கும் தெரிந்தாலும், குர் ஆணை சன் சைடு மேல் வைத்து மறப்பவர் போல் மறந்து விடுகின்றனர்.விபத்தை தடுக்க அருமையான வழிமுறைகள் - நன்றி. இரவு நேரங்களில் கண்ணை கூசும் ஹெட் லைட் பெரிய பிரச்சனையில் ஒன்று

    ReplyDelete

About This Blog

shahulhameed
saudi

பிரபலமான இடுகைகள்

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP