Powered by Blogger.

Saturday 13 October, 2012

உலகம்

உலகம் எப்படி உருவானது என்ற சோதனை நடக்கின்றது . ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் இந்த சோதனையை நடத்துகிறது. உலகம் எப்படி உருவானது என்பதை கொஞ்சம் பிராக்டிலாக சோதனை செய்து பார்க்கப் போகிறார்கள் விஞ்ஞானிகள்.




அதாவது புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் அதி பயங்கர வேகத்தில் மோதவிட்டு வேடிக்கை பார்க்கப் போகிறார்கள்.(இது என்ன லண்டன் கந்துரி கடையா வேடிக்கை பார்க்க ) இதற்காக கிட்டத்தட்ட 300 அடி ஆழத்தில் 27 கி.மீ. தூரத்துக்கு வட்டமான சுரங்கம் அமைத்து அதற்குள் சப் அடாமிக் பார்ட்டிகிள்ஸ் (புரோட்டான், நியூட்ரான்) மோதிக் கொள்ளும் வட்ட வடிவ பைப்பை அதற்குள் அமைத்திருக்கிறார்கள். இதற்காக பல பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளனர் ஐரோப்பிய நாடுகள். கிட்டத்தட்ட 5,000 விஞ்ஞானிகளின் கூட்டு சேர்ந்து இந்த டீம் வொர்க் நடக்கின்றது



தடிமனான இரும்பால் செய்யப்பட்டு ரீ-இன்போர்ஸ்ட் சிமெண்ட் மற்றும் பலவித ரசாயனங் களை கலந்து பூசி மொழுவி , அணு கதிர்வீச்சை தாக்குப்பிடிக்கும் பாதுகாப்பு கொண்ட இந்த கொல்லாய்டர்.எனும் ஆய்வு கலன்

தயார் செய்யப்பட்டு உள்ளது

இது அணுக்களை பிளக்க உதவும் வழக்கமான சைக்ளோட்ரான் மாதிரி தான்.இதன் செயல்பாடும் ஆனால், இதில் விஷேசம் என்னவென்றால் இதன் வேகம்.( என்ன இவன் எப்போ பார்த்தாலும் வேகத்தை பத்தியோ போட்டு அருக்கின்றானே என்று வேகமா புலம்புவது காதில் விழுது ) 1,800 'சூப்பர் கண்டக்டிங்' காந்தங்கள் புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் இந்த 27 கி.மீ. வளையத்தில் சுற்றவிடவுள்ளனர் சர்கஸில் கூண்டுக்குள் பைக்கில் சுத்துவார்களே அதுபோல் . LHC தன் முழு வேகத்தை அடைந்தவுடன் புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் வினாடிக்கு 600 மில்லியன் முறை நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள்.(இதை எல்லாம் எப்படித்தான் எண்ணுகிறார்களோ )



அப்போது புரோட்டான்களி்ல் 7 டிரில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்ஸ் அளவுக்கு 'சக்தி' உருவாகும். அப்போது ஏற்படும் 'சப் அடாமிக் லெவல்' மாற்றங்களை இந்த 27 கி.மீ. வட்டத்தில் பொறுத்தப்பட்டு்ள்ள ஆயிரக்கணக்கான சென்சார்கள் அப்சர் செய்து அந்த விவரங்களை சூப்பர் கம்ப்யூட்டர்களில் பீட் செய்ய திட்டமிட்டு உள்ளனர் கிட்டத்தட்ட 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு மாபெரும் வெடிப்பில் இருந்து தான் (Big Bang) பூமி உள்பட Universe தோன்றியது என கருதப்படுகிறது. அப்போது இருந்த சூழலை இந்த 27 கி.மீ. வட்டத்தில் உருவாக்கிப் பார்க்கப் போகிறார்கள்.அதாவது உலகம் எப்படி உறவானது என்று ஒரு ரிகர்சல் பார்க்க போகின்றார்கள்



இந்த வளையத்தில் புரோட்டான்கள் என்ன வேகத்தி்ல் சுற்றி வரப் போகின்றன என்பதை இப்படி ஈசியாக சொல்லாம் ஒரு வினாடியில் இந்த 27 கி.மீ. தூரத்தை புரோட்டான் 11,245 முறை சுற்றி வரும்.அடுபங்கரையை பூனை சுற்றி வருவதைப்போல்

இந்த அளவுக்கு வேகம் பிடித்த புரோட்டான்களை அப்படியே நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள். (காட்டு மாடுகள் அனிமல் சேனலில் முட்டிககொள்வதுபோல்) இப்போது புரிகிறதா.. உள்ளே என்ன நடக்கப் போகிறது என்பது.



அணு என்றால் என்ன புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய 'சப் அடாமிக்' கூறுகளைக் கொண்டது தான் ஒரு அணு. குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகியவற்றால் ஆனது தான் ஒரு புரோட்டான்.



ஆக, LHCல் வைத்து அதிவேகத்தில் புரோட்டான்களை வட்டில் அப்பம் வைக்க முட்டை அடிப்பதுபோல் அடித்தால் குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என புரோட்டான்கள் பலவாறாக அடித்து சிதறடிக்கப்படும் மேலும் Higgs Boson என்று ஒரு சமாச்சாரம்.உண்டு ஒரு சப்-அடாமிக் பார்ட்டிகிள் இருப்பதாக தியரியில் சொல்கிறார்கள். ஆனால், அதை யாரும் இது வரை நிரூபித்ததில்லை.அறிவியலில் எந்த விசயமாக இருந்தாலும் நிருபிக்கப்படவேண்டும் (சும்மா வாயால் விடும் புருடாவிற்க்கேல்லாம் வேலை இல்லை ) இதனால் இதை விஞ்ஞானிகள் 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்கிறார்கள். அப்படி ஒன்று இருந்தால் இந்தச் சோதனை மூலம் வெளியில் கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையில் 5000 விஞ்ஞானிகள் ஆனால், இது மிக ஆபாயகரமான ஆராய்ச்சி என உலகம் முழுவதும் கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. (கூடன்குள கதைதான் அங்கும் )உலகத்தின் கதையே முடியப் போகிறது என்று கூட சிலர் அவுத்தும் விடுகின்றார்கள்



இவ்வளவு வேகத்தில் சப் அடாமிக் அணுத் துகள்களை மோதச் செய்யும்போது பிளாக் ஹோல் (Black Hole) கூட உருவாகிவிடலாம் என்கிறார்கள். Black Hole என்பது நம் ஊரில் ஒரு சஹன் சோத்தை ஒரே ஆள் உள்ளே தள்ளுவிட்டு மறு சோறும் கேட்ப்பாரே அதுபோல் . உள்ளே போனால் போனது தான் எதுவுமே வெளியே வராது.. ஒளி-ஒலி உள்பட. (பிளாக் ஹோல் நேரத்தையும் கூட விழுங்கிவிடும்.. இது அதீதமான டெக்னி்க்கல் சமாச்சாரம். மண்டையை போட்டு ரொம்பவே குழப்பிக் கொள்ள வேண்டாம். இப்ப மட்டும் என்னவாம் தெளிவாவா இருக்கு என்று பலரும் புலம்புவது காதில் விழத்தான் செய்கின்றது



நமது அண்டத்தில் (Universe) ஏராளமான மண்டலங்கள்,கிழக்கு மண்டலம் மேற்கு மண்டலங்கள் அல்ல அதாவது கேலக்ஸிகள் (Galaxies) உள்ளன. நமது சூரியன், பூமி, கோள்கள் உள்ளிட்ட சூரிய குடும்பம் (D.M.K.குடும்பம் அல்ல ) இருக்கும் மண்டலத்தின் பெயர் பால்வெளி மண்டலம்



பல பில்லியன் சூரிய குடும்பங்கள் சேர்ந்தது ஒரு கேலக்சி. பல பில்லியன் கேலக்சிகள் சேர்ந்தது தான் யுனிவர்ஸ். இந்த யுனிவர்ஸ் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே போகிறது என்பது தான் மிக இன்ட்ரஸ்டிங்கான விஷயம்.

ஒரு சிறிய பட்டாணிக்கடலை சைசில் இருந்த யுனிவர்ஸ், Big bangல் வெடித்துச் சிதறி விரிவடைய ஆரம்பித்தது.. விரிவடையும்போது அதற்குள் உருவானவை தான் பூமி, கோள்கள், நிலாக்கள், (அது என்ன நிலாக்கள் நிலா தானே என்று கேள்வி வரும் அதாவது நமது பூமிக்கு ஒரு நிலாதான் மற்ற கோள்களுக்கு நான்கு ஐந்து நிலாக்கள் எல்லாம் உண்டு நாம் ஒருநிலாவை வைத்துக்கொண்டு பாட்டும் கவிதையும் போட்டு தாக்குகின்றோம் ). எரிகற்கள், சூரியன்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவைகல்தான் கேலக்சிகள்.



இன்னும் விரிந்து கொண்டே இருக்கும் அண்டத்தில் மேலும் மேலும் ஏராளமான கேலக்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. கூடவே பிளாக் ஹோல்களும்.



இந்த பிளாக் ஹோல்கள் ஒளி-ஒலியை மட்டுமல்ல, சூரியன்களைக் கூட விழுங்கி ஏப்பம் விடும் சக்தி கொண்டவை.



இதனால் தான் இந்த அதிவேக சப் அடாமிக் பிளப்பு சோதனை ஆபத்தானது... இதனால் பிளாக் ஹோல் உருவாகப் போகிறது.. அப்படி உருவானால் அது பூமியையே விழுங்கலாம் என்ற அச்சத்தை கிளப்பி விட்டுவிட்டார்கள் .



ஆனால், அப்படியெல்லாம் ஏதும் நடந்துவிடாது என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியை நடத்தும் CERN மையத்தின் விஞ்ஞானிகள்.இதைத்தானே கூடங்குளத்திலும் நம் விஞ்ஞானிகள் சொல்கின்றார்கள்

எந்த ஒரு நாட்டில் விஞ்ஞானிகளும் பொது மக்களும் ஒத்து போகின்றார்களோ அந்த நாடுதான் முன்னேற்றத்தில் முன்னணியில் இருக்கும்.



இத்தனை பணம் செலவு செய்து உலகையோ பணையம் வைத்து இந்த ஆராய்ச்சியை செய்யும் இவர்கள் இந்த அல் குரானின் சுராவை பார்க்கதுது ஏனோ !!!!!



7:54. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.

No comments:

Post a Comment

About This Blog

shahulhameed
saudi

பிரபலமான இடுகைகள்

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP