எங்கோ பிறந்த நீ, உன் பிரிவால் வாடும் நான்.
நெஞ்சு பொறுக்குதில்லையே உன் புன்முகத்தை பார்க்கயிலே.
பாடம் படிக்க பள்ளிக்கூடம் சென்ற நீ, இவ்வுலகத்தை விட்டே சென்று விட்டாயே.
உன்னைப்பாசத்துடன் கட்டித்தழுவ காத்திருந்த பெற்றோர்களோ, உன் உயிரற்ற உடலையல்லவாப் பெற்றுக்கொண்டனர்.
தனிமையில் வண்டிக்குள் நீ என்ன தான் சிரமப்பட்டாயோ, கதறினாயோ? உனக்கு உதவிட மனிதர்கள் இல்லாமல் போனார்களேஅங்கு.
அக்கடைசி நிமிடத்தில் உன் கூக்குரலை நினைக்கையில் என் உள்ளம் பதறுதம்மா...எரிமலையாய் வெடித்துச்சிதறுதம்மா..
ஒரு பக்கம் உலகில் உயிர்கள் ஏதோ நோக்கத்திற்காக கொல்லப்படுகின்றன. மறுபக்கம் நோக்கமின்றி பறிபோகின்றன.
காரணங்களை நான் யாரிடம் கேட்பேன்?
கோடிகள் பல உன் உயிருக்காக கொட்டிக்கொடுத்தாலும்
உன் பிஞ்சுக்குரலும், புன்முறுவலும் நெஞ்சை என்றும் வருடும்.
உன் அரவணைப்பும், அன்பும் எங்களுக்குச்சொல்லும் மில்லியன் பாடம். இதற்கு ஈடேதும் உண்டோ?
கட்டித்தழுவ உன் தேகமும், முத்தமிட உன் இதழும் இன்று இல்லாமல் போனது ஏனோ?
கவனக்குறைவே உனக்கு இரக்கமில்லையா? உன் உறக்கத்தில் ஒரு உயிரை பறித்தாயே?
இங்கு விளையாட உனக்கு ஸ்நேகிதிகள் இல்லாமல் போயிருக்கலாம். விளையாட்டுப்பொருட்கள் கிடைக்காமல்இருந்திருக்கலாம்.
சொர்க்கத்தின் பூஞ்சோலையில் நீ விரும்பியதைப்பெற்று வானவர்களுடன் அந்த வசந்த மாளிகையில் நீ சந்தோசமாககளைப்பின்றியும் கவலையின்றியும் விளையாட உன்னையும், எம்மையும் படைத்த அந்த இறைவனிடம் உனக்காகஇறைஞ்சுகின்றேன்.
நேற்று சவுதி அரேபியா தம்மாமில் ஒரு பள்ளி வேன் டிரைவரின் அலட்சியத்தால் ஓர் பச்சிளம் உயிர் பறிபோனப்பரிதாபம்.....பற்றிஎன் உள்ளத்தில் உருவாகிய அக்குமுறலை இங்கே பதிகின்றேன். அக்குழந்தையின் பெற்றோர்களுக்கு அல்லாஹ்பொறுமையைத்தந்தருள நாம் து'ஆச்செய்வோம் அது யாராக இருப்பினும் சரியே.
எனவே நம் வீட்டு சிறுபிள்ளைகளை ஏனோ, தானோ என்று தன் கவனக்குறைவாலும், அலட்சியப்போக்காலும், தன்வேலை/தொழிலில் மட்டும் முழு கவனம் செலுத்தி மற்ற குடும்ப விசயங்களை சரிவர கவனிக்காமல் இருப்பதால் இது போன்றமீளாத்துயர சம்பங்கள் அவ்வப்பொழுது நடந்து விடுகின்றன. எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் இது போன்ற துயர சம்பவங்கள் இனிஎங்கும் நடக்காமலும், கேள்விப்படாமலும் நம்மைப்பாதுகாத்து தந்தருள்வானாக. ஆமீன்...
இப்படிக்கு.
இச்சம்பவத்தை படித்ததும் உள்ளம் உருகியவனாக இருக்கின்றேன்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
Sunday, 13 June 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment