Powered by Blogger.

Wednesday 4 May, 2011

ராக்கெட் விடலாம் வாங்க!

இந்தியாவின் பிஎஸ்எல்வி-சி16 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ரிசோர்ஸ்சாட்-2, யூத்சாட். எக்ஸ்-சாட் ஆகிய 3 செயற்கைக்கோள்களுடன் இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட 18 நிமிடங்களில் 3 செயற்கைக்கோள்களையும் பிஎஸ்எல்வி ராக்கெட் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தியது.




சுற்று வட்ட பாதை என்றால் என்ன?


அங்கு யாருப்பா ரோடு போட போறதுன்னு நினைக்க வேண்டாம் இங்கு கணினியில் போடும் கோடு தான் அங்கு ராக்கெட் போகும் ரோடு. நாம் இங்கு இந்தியாவில் இருந்து செலுத்தப்படும் ராக்கெட் புவி ஈர்ப்பு விசையை தாண்டி (பூமியில் இருந்து கிட்டத்தட்ட 15 km வரை புவி ஈர்ப்பு விசை இருக்கும் ) 350 kmல் இருந்து 450 km மேலே பூமி சுற்றும் வேகத்திற்கு இணையாக இந்த செயற்கைக்கோள் இந்தியாவின் மேல் சுற்றிக்கொண்டு வரவேண்டும் அப்படி சுற்றிக்கொண்டு வந்தால் தான் நாம் நமது நாட்டின் போக்குவரத்து கனிம வளங்களை படம் எடுக்க முடியும்!.





எரிபொருள்





1206 கிலோ எடைகொண்ட ரிசோர்ஸ்சாட்-2 தற்போது விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள். 5 ஆண்டுகள் பூமியை சுற்றிவரும் என்றால் இதற்க்கான எரிபொருளுக்கு என்ன செய்வார்கள் என்ற கேள்வியை நம்ம கவிக்காகா கவிதையாய் கே(கு)ட்டுவைப்பார் அதற்கான பதில் தான் கிழே.



நாம் புவி ஈர்ப்பு விசையை தாண்டி என்ன வேகத்தில் செயற்கைக்கோளை(அல்லது வெறு எந்த பொருளையும்) செலுத்தினோமோ(வீசுதல்) அதே வேகத்தில் அது பூமியை சுற்றிக்கொண்டே வரும் காரணம் அங்கு பூமியைப்போல் இழு விசை கிடையாது என்பதால் செலுப்தப்பட்ட .செயற்கைக்கோள் கொஞ்சம் கூட வேகம் குறையாமல் செலுத்திய வேகத்திலையோ பூமியை சுற்றி வலம் வந்துகொண்டே இருக்கும்.ஆகையால் 5 வருடமோ அல்லது 10 வருடமோ பூமியை செயற்கைக்கோள் சுற்றி வருவதற்கு எந்தவித் எரிபொருளும் அங்கு தேவைப்படாது




மின்சாரம்





செயற்கைக்கோள் செயல்பட தேவையான மின்சாரம் சூரிய ஒளியில் இருந்து சோலார் பேணல் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு இந்த மின்சாரத்தை கொண்டுதான் செயற்கைக் கோளில் உள்ள கேமரா மற்றும் அதில் உள்ள மின்னணு சாதனங்கள் அனைத்தும் இயங்கும்.







கேமரா





செயற்கை கோளில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராக்கள் மிக துல்லியமாக புகைப்படங்களை எடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும் எந்த அளவுக்கு என்றால் ஜாகிர் வீட்டு மாடியில் ரூபவாகினி டிவி க்கு அன்று நாங்களாக செய்து கட்டிய ஆண்டனா இன்று எந்த நிலையில் உள்ளது என்பதனை மிக துல்லியமாக பார்த்துவிடலாம். அதுபோல் நொங்கு விற்கும் மாட்டு வண்டி கடற்கரை தெருவில் நிற்கின்றதா? தக்குவா பள்ளி வாசல் அருகில் உள்ளதா அல்லது மொத்த நொங்கையும் நம்ம MSM மொத்தமாக வாங்கி வீட்டுக்கு கொண்டுபோய்விட்டார ? என்பதனை கூட பார்த்தது விடலாம்.மேலும் பூமியில் நிகழும் பெரும் மாற்றங்களையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.கடலில் மீன்கள் எங்கு அதிக அளவில் காணப்படுகிறன என்பதனை அறிந்து மீனவர்களுக்கு தகவல் கொடுக்கலாம்.






விண்ணில் இருந்து பூமியை பார்க்கும் போது மற்ற இடங்களை விட புனித மக்கா மிக தெளிவாக தெரிகின்றதாம்!



-- Shameed

Dammam

No comments:

Post a Comment

About This Blog

shahulhameed
saudi

பிரபலமான இடுகைகள்

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP