Powered by Blogger.

Tuesday, 21 September 2010

உலகிற்கு ஓர் உலோகப்பறவை

ஷாஹுல் ஹமீது உலகிற்கு ஓர் உலோகப்பறவை குறித்த நாளில் இருந்து ஆறுவருடம் தாமதமாக வந்துள்ளது இந்த போயிங் கம்ப்பெனியின் கனவு விமானம் போயிங் 787 ( 786 அல்ல ) ட்ரீம் லைனர் அதி நவீன சொகுசு விமானம். இந்த சொகுசு விமானம் அடுத்த சில வாரங்களில் பரக்க ரெடியாக உள்ளது. இதன் சிறப்பு உலகில் உள்ள விமானங்களில் இது தான் சொகுசு விமானம் இந்த சொகுசு விமானத்தை திட்டமிட்டபடி தயாரிக்க முடியவில்லை காரணம் பெரிய அளவில் ஆர்டர் கிடைக்கவில்லை (நமக்கு செய்தி தெரிந்தால் தானே ஆர்டர் கொடுக்கலாம் )விலையும் அதிகம் மேலும் தொழிலளர் வேலை நிறுத்தம் (நம்ம ஆளுங்க வேலை நிறுத்த டெக்னிக்கை அங்கும் சொல்லிபுட்டங்களா )இறக்கை பொருத்துவதில் டெக்னிக் ப்ராப்ளம் ஆகியவை இதன் வருகையை தாமதபடுத்தி விட்டது, இத்தனை தடைகளையும் தாண்டி சில நாட்களுக்கு முன்பு இந்த சொகுசு விமானம் வெள்ளோட்டம் விடப்பட்டது முதன் முதலில் "நிருபர்கள்" பயணித்தனர். இதன் சிறப்பு உயரம் அதிகம் கொண்ட கேபின் சொகுசான பஞ்சு மெத்தைகள் கொண்ட இருக்கைகள் உள்ளுக்குள் அதி நவீன விளக்குகள் .மிக குறைந்த எரிபொருள் (கம்மிய சாப்பிடும் கூடுதலா வேலை செய்யும் நமக்கு ஆப்போசிட்ட இருக்குது ) மிக குறைந்த சத்தம் (எத்தனை D P ) என்பது தெரியவில்லை (சத்தைதை அளவிடும் முறைக்கு டேசிபால். D P என பெயர். ) இந்த விமானம் சிட்னிளிருந்து (சகோ ஹாலித் கவனிக்கவும் )சிகாகோ வரை நீண்ட பயணத்தை செய்யும் தகுதி உடையது என்பது குறிப்பிட தக்கது . சில ஆண்டுகளுக்கு முன் ஏற் பஸ் நிறுவனம் A 380 என்ற விமானத்தை அறிமுகப்படுத்தியது இதற்கு பல நாடுகளில் இருந்து ஆர்டர் குவிந்தது இதற்கு போட்டியாகதான் ட்ரீம் லைனர் விமானத்தை தற்போது போயிங் கம்பெனி இதை களத்தில் இறக்கி உள்ளது A 380 விமானத்தில் 500 கும் மேற்பட்டோர் பயணம் செய்யலாம் இதனால் நீண்ட தூர விமான சேவையில் ஏற் பஸ் எ 380 நல்ல வரவேற்பை பெட்ருள்ளது . இருபினும் ட்ரீம் லைனர் விமானத்தில் 290 பயணிகள் மட்டுமே பயணம் செய்யமுடியும் இது நீண்டதூர பயணத்திற்கு ஏற்ற விமானமாக கருதப்படுவதால் இந்த விமானம் நீண்ட நாள் தமாதத்திற்கு பின் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது இந்த கனவுலக விமானம்.

Monday, 20 September 2010

உலகிற்கு ஓர் உலோகப்பறவை

குறித்த நாளில் இருந்து ஆறுவருடம் தாமதமாக வந்துள்ளது இந்த போயிங் கம்ப்பெனியின் கனவு விமானம்
போயிங் 787 ( 786 அல்ல ) ட்ரீம் லைனர் அதி நவீன சொகுசு விமானம் .இந்த சொகுசு விமானம் அடுத்த சில வாரங்களில் பரக்க ரெடியாக உள்ளது .இதன் சிறப்பு உலகில் உள்ள விமானங்களில் இது தான் சொகுசு விமானம் இந்த சொகுசு விமானத்தை திட்டமிட்டபடி தயாரிக்க முடியவில்லை காரணம் பெரிய அளவில் ஆர்டர் கிடைக்கவில்லை (நமக்கு செய்தி தெரிந்தால் தானே ஆர்டர் கொடுக்கலாம் )விலையும் அதிகம் மேலும் தொழிலளர் வேலை நிறுத்தம் (நம்ம ஆளுங்க வேலை நிறுத்த டெக்னிக்கை அங்கும் சொல்லிபுட்டங்களா )இறக்கை பொருத்துவதில் டெக்னிக் ப்ராப்ளம் ஆகியவை இதன் வருகையை தாமதபடுத்தி விட்டது ,

இத்தனை தடைகளையும் தாண்டி சில நாட்களுக்கு முன்பு இந்த சொகுசு விமானம் வெள்ளோட்டம் விடப்பட்டது முதன் முதலில் "நிருபர்கள்" பயணித்தனர்
,
இதன் சிறப்பு உயரம் அதிகம் கொண்ட கேபின் சொகுசான பஞ்சு மெத்தைகள் கொண்ட இருக்கைகள் உள்ளுக்குள் அதி நவீன விளக்குகள் .மிக குறைந்த எரிபொருள் (கம்மிய சாப்பிடும் கூடுதலா வேலை செய்யும் நமக்கு ஆப்போசிட்ட இருக்குது ) மிக குறைந்த சத்தம் (எத்தனை D P ) என்பது தெரியவில்லை (சத்தைதை அளவிடும் முறைக்கு டேசிபால். D P என பெயர். )
இந்த விமானம் சிட்னிளிருந்து (சகோ ஹாலித் கவனிக்கவும் )சிகாகோ வரை நீண்ட பயணத்தை செய்யும் தகுதி உடையது என்பது குறிப்பிட தக்கது
.
சில ஆண்டுகளுக்கு முன் ஏற் பஸ் நிறுவனம் A 380 என்ற விமானத்தை அறிமுகப்படுத்தியது
இதற்கு பல நாடுகளில் இருந்து ஆர்டர் குவிந்தது இதற்கு போட்டியாகதான் ட்ரீம் லைனர் விமானத்தை தற்போது போயிங் கம்பெனி இதை களத்தில் இறக்கி உள்ளது
A 380 விமானத்தில் 500 கும் மேற்பட்டோர் பயணம் செய்யலாம் இதனால் நீண்ட தூர விமான சேவையில் ஏற் பஸ் எ 380 நல்ல வரவேற்பை பெட்ருள்ளது . இருபினும் ட்ரீம் லைனர் விமானத்தில் 290 பயணிகள் மட்டுமே பயணம் செய்யமுடியும்
இது நீண்டதூர பயணத்திற்கு ஏற்ற விமானமாக கருதப்படுவதால் இந்த விமானம் நீண்ட நாள் தமாதத்திற்கு பின் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது இந்த கனவுலக விமானம்

Shahuhameed
Dammam

Sunday, 19 September 2010

எனக்கு பிடித்த கவிதை

பத்துமாத
பாதுகாப்பு வளை-
கதறிக்கொண்டே கண்திறந்த...
பிறந்த தெரு என் தெருவா?
கால்களில் இறக்கை கட்டி-
கடலென்றும் காடென்றும்-
குளமென்றும் குட்டையென்றும்- குதித்துத் திறிந்த... வளர்ந்த தெரு என் தெருவா? பள்ளிக் கூடப் படிப்பும்- வகுப் பறைகளின் வசீகரமும்- வாத்தியார்களின் வாஞ்சையும்- என... பயின்ற தெரு என் தெருவா? அரும்பிய மீசையும்- தழும்பிய ஆசையும்- தவம் கிடந்த பார்வைகளும்- கத்துக்குட்டி கவிதைகளும்- என... களித்திருந்த தெரு என் தெருவா? பார்த்ததெல்லாம் அழகாகவும்-. படித்ததெல்லாம் தெளிவாகவும்-
நொடி நேர பார்வைக்கும்-
கோடி அர்த்தம் கண்ட-
கல்லூரிக் காலங்கள்...
கழிந்த தெரு என் தெருவா?
வாயிக்கும் வயிற்றிற்கும்-
சார்ந்தவர்களுக்கும் சேர்ந்தவளுக்கும்
என...
பிறந்த மண் துறந்து
பொருள் தேடி...
அலையும் தெரு என் தெருவா?
வைத்த காலம் முதல்
அழைத்த பெயரை-
மாமாவிலும் மச்சானிலும்
'என்னங்க'விலும் 'இந்தாங்க'விலும் வாப்பாவிலும் அப்பாவிலும்
தொலைத்து விட்டு-
மையத்து என்ற
பெயர் மட்டும் தாங்கி மாய்ந்து... அடங்கும் தெரு என் தெருவா? பொறு சகோதரா... மஹ்சரில் சந்திப்போம் ஒரே தெருவில்! -sabeer

Tuesday, 20 July 2010

கிரையோஜெனிக் ராக்கெட்

தண்ணீரை ஊற்றி ஒரு வாகனத்தை செலுத்த முடிமோ முடியாதோ - ஒரு ராக்கெட்டை இயங்கச் செய்ய முடியும். அதுதான் கிரையோஜெனிக் ராக்கெட். என்ன ஆரம்பமே குழப்பமாக உள்ளது என்று யோசனை பண்ணவேண்டாம் மேலும் படிங்கள் நீரை ஆக்சிஜன் வாயுவாகவும், ஹைட்ரஜன் வாயுவாகவும் தனித்தனியே பிரித்து அந்த வாயுக்களைப் பயன்படுத்தி ஒரு ராக்கெட்டை இயங்கச் செய்ய முடியும். அதுதான் கிரையோஜெனிக் ராக்கெட். இந்தியா முதல் தடவையாக உருவாக்கியுள்ள கிரையோஜெனிக் ராக்கெட் ஏப்ரல் 15-ம் தேதி புறப்பட்டு தடம் (ரோடு எங்கே என்று கேட்ககூடாது )மாறியது வேறுவிசயம் .ஆக்சிஜன் 2 மடங்கு ஹைட்ரஜன் வாயுவும் 1 பங்கு ஆக்சிஜன் வாயுவும் ஹைட்ரஜன் வாயு தீப்பற்றி எரியக்கூடியது. அவ்விதம் எரிவதற்கு ஆக்சிஜன் வாயு உதவும் இரு வாயுக்களையும் ராக்கெட்டில் பயன்படுத்தினால் உந்து திறன் (வேகம்) அதிகரிக்கும் அதிக எடை கொண்ட ராக்கெட்களை எளிதாக மேலே தூக்கி செல்லும் ஆனால் இந்த வாயுக்களைப் பயன்படுத்தும் ராக்கெட் எஞ்சின்களை உருவாக்குவதில் நமக்கு நிறையப் பிரச்னைகள் உள்ளது (இதில் ரஷ்யர்கள் பலே கில்லாடிகள்) என்ன பிரச்னைகள் அப்படி நம் வீட்டில் சமையல் காஸ் இருக்கிறது. அடுப்பைப் பற்ற வைத்ததும் காஸ் (வாயு) எரிகிறது. ஆனால், சிலிண்டருக்குள் இருப்பது காஸ் அல்ல. நல்ல அழுத்தத்தில் சமையல் வாயுவைத் திரவமாக்கி அந்தத் திரவத்தைத் தான் சிலிண்டரில் அடைத்திருக்கிறார்கள் ( இது நிறையபோருக்கு தெரியாது ) ஆனால், சிலிண்டருக்குள் இருப்பது காஸ் அல்ல நல்ல அழுத்தத்தில் சமையல் வாயுவைத் திரவமாக்கி அந்தத் திரவத்தைத் தான் சிலிண்டரில் அடைத்திருக்கிறார்கள். வாயு வடிவில் நமக்கு சிலிண்டர் அவருவதாக இருந்தால் வீடு கொள்ளாத அளவுக்குபெரிய சிலிண்டர் தேவைப்படும் அடுத்து மேட்டருக்கு வருவோம் சமையல் காஸ் போலவே ஆக்சிஜன், ஹைட்ரஜன் ஆகிய இரு வாயுக்களையும் தனித்தனியே திரவமாக்கி ஹைட்ரஜனைத் ஒரு டாங்கிலும் ஆக்சிஜன் ஒரு டாங்கிலும் அடைத்து ராக்கெட் எஞ்சினில் இரு வாயுக்களையும் சேர வைத்து எரியும்படி செய்யலாம். ஆனால் ஆக்சிஜன் வாயுவை வெறும் அழுத்தத்தைப் பிரயோகித்துத் திரவமாக்க அங்கு மைனஸ் 183 செல்சியஸ் குளிர்வித்தால் தான் அது திரவ நிலையை அடையும் அது போலவே ஹைட்ரஜன் வாயுவையும் மைனஸ் 253 செல்சியஸ் குளிர் படுத்த வேண்டும் (நம் ஊர் AMK அஹ்மத் காக ஐஸ் கம்பனி எல்லாம் ஜுஜுபி )கிரையோஜெனிக் என்றால் கடும் குளிர் என்று ஒரு அர்த்தாம் உண்டு அதன் காரணமாகவே கிரையோஜெனிக் எஞ்சின் என்றும், கிரையோஜெனிக் ராக்கெட் என்றும் பெயர் வைத்துள்ளார்கள் இந்த தொட்டிகள் மீது வெளிக்காற்று பட்டாலே போதும். இரண்டும் மிக விரைவில் ஆவியாகிவிடும் (ஆவி யாரையும் போய் பிடித்து வேப்பிலை அடிக்க சொல்லாது ) . இந்த தொட்டிகளை கடுமையான குளிரில் வைத்து இருக்க வேண்டும் ராக்கெட் செலுத்தப்படுவதற்குத் கொஞ்ச நேரதிற்கு முன்பு இந்த இரண்டு திரவங்களும் பொருத்தப்படும் இந்த திரவங்களையும் பயன்படுத்துகிற ராக்கெட் எஞ்சினை வடிவமைத்து உருவாக்குவதுதான் சிக்கலான விஷயம். ராக்கெட்டுக்குள் திரவ ஹைட்ரஜனும், திரவ ஆக்சிஜனும் அடங்கிய தொட்டிகளிலிருந்து இவை ஆவியாகிவிடாமல் குளிர்விக்க வேண்டும். அங்கிருந்து அவை இரண்டும் தனித்தனியே ராக்கெட்டின் எஞ்சின் பகுதிக்கு வந்து சேர வால்வுகள், ரெகுலேட்டர்கள், சுழல் பம்புகள் போன்ற உறுப்புகள் தேவை. சுழல் பம்பு நிமிஷத்துக்கு 42 ஆயிரம் தடவை சுழல்வதாக இருக்கும். இவையெல்லாம் விசேஷ கலப்பு உலோகத்தால் செய்யப்பட வேண்டும். ஏனெனில், கடும் குளிர் நிலையில் உலோகங்கள் ஒடிந்து விடாமல் இருக்க அதி நவீன கலப்பு உலகங்களினால் ஆனா உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படும் . ராக்கெட்டுக்குள் கடும் குளிர்விப்பு நிலையில் திரவ வடிவில் உள்ள ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் ராக்கெட்டின் எஞ்சின் பகுதிக்கு வந்ததும் வாயுவாக மாறி ஒன்று சேர்ந்து எரியும். அப்போது 3,000 டிகிரி செல்சியஸ்( வேகாத கோழி மட்டன் இவை எல்லாம் ஒரு செகடில் பஸ்பம் ) அளவுக்குக் கடும் வெப்பம் தோன்றும். ஆகவே, இந்த வெப்பத்தைத் தாங்கி நிற்க ராக்கெட் எஞ்சின் பகுதியும் விசேஷ கலப்பு உலோகத்தால் தயாரிக்கப்படுகிறது. விஷயத்துக்கு வருவோம் "அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்" (குர்ஆன் 6:125) அது என்ன விண்வெளியில் பயணம் செய்பவனின் மனதை போல் சுருங்கி இருக்குமாம் நாம் இந்த பூமி இன் இலுவிசையை தாண்டினால் உடல் உறுப்புக்கள் அனைத்தும் சுருங்கிவிடும் என்பதை சுமார் 1500 வருடங்களுக்கு முன்பே இறைவன் அறிவித்துள்ளான் மனிதர்களுக்கு விண்வெளியில் பயணம் செய்யகூடிய அறிவை வழங்கிவிட்டதாக இதை நாம் எடுத்து கொள்ளலாம் அல்லவா. நோன்பு வருகின்றது அல்லாஹ்வின் பொருத்ததை அடைவதற்காக ஜகாத்தின் மூலம் உங்களால் முடிந்த உதவிகளை வசதியற்ற உற்றார் உறவினர்களுக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் செய்திடுங்கள். ஆக்கம் - SHAHULHAMEED தம்மம்

Wednesday, 7 July 2010

நமக்குள் எழும் விடை தெரியா சில கேள்விகள்.....

வசதி வாய்ப்புகளும், அத்தியாவசிய தேவைகளும், அறிவியலின் நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும், அதன் பயன்பாடுகளும், மருத்துவ உலகம் மனிதனின் வாழ்நாளை நீடிப்பதற்காக அது எடுத்துக்கொண்ட ஆராய்ச்சிகளும், சிரமங்களும், சவால்களும் அதன் வெளிப்பாடும், பயன்பாடும் அதிகம் இல்லாத அக்கால மனிதர்களின் வாழ்வில் ஏற்பட்ட மனநிறைவும், அமைதியும், சந்தோசமும் விஞ்ஞான வளர்ச்சிகளெல்லாம் விண்ணை முட்டும் அளவுக்கு முன்னேறி இருக்கும் நவீன கணிப்பொறி காலமாக திகழும் நாம் வாழும் இக்காலத்தில் இருப்பதாக தெரியவில்லையே ஏன்? கிட்டத்தட்ட 80 அல்லது 90 வயதான நடமாடும் பெரியவர்களை ஒரு காலத்தில் அதிகம் பார்த்த நாம் இன்று அதுபோல் அதிகம் பார்க்க முடிவதில்லையே ஏன்? குள‌ங்க‌ளில் ம‌ழைகால‌த்தில் நிர‌ம்பும் நீர் தேக்க‌ம் இடையில் வ‌ரும் கோடைகாலத்தைதாண்டி அடுத்து வரும் ம‌ழை கால‌ம் வரை கொஞ்சமேனும் தேங்கி இருந்த‌து போல் இன்று இருப்பதில்லையே ஏன்? எவ்வ‌ள‌வோ தூர‌மான‌ சொந்த‌,ப‌ந்த‌ங்க‌ளை (தூர‌த்துச்சொந்த‌ம்) ஏதேதோ சொல்லி இழுத்துப்போட்டு சொந்த‌ம் கொண்டாடிய‌ ம‌னித‌ர்கள் அதிகம் இருந்த‌ அக்கால‌த்தில் இன்று நெருங்கிய‌ சொந்த‌ங்க‌ள் கூட‌ யாரோ/எவ‌ரோ, ஏனோ/தானோ என்று எவ்வித‌ இணைப்பும், பிணைப்பும் இல்லாம‌ல் இருந்து வ‌ருவ‌து ஏன்? அன்று பெரிய‌வ‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே வ‌ந்து அவ‌ர்க‌ளை கொஞ்ச‌ கால‌ம் படாத‌பாடு ப‌டுத்தி இறுதியில் ம‌ர‌ண‌ப்ப‌டுக்கையில் ப‌டுக்க‌ வைத்த‌ கொடிய‌ நோய்களாம் புற்று நோய், காச‌நோய், சர்க்கரை நோய் போன்ற‌ உயிர்க்கொல்லி நோய்க‌ள் இன்று வாலிப‌ர்க‌ளையும், சின்ன‌ஞ்சிறார்க‌ளையும் கூட‌ விட்டு வைக்காம‌ல் வாட்டி வ‌த‌க்கி வ‌ருவ‌து ஏன்? மார்க்க‌ விச‌ய‌மாக‌ இருந்தாலும் ச‌ரி, உல‌க‌ விச‌ய‌மாக‌ இருந்தாலும் ச‌ரி எத்த‌னையோ விழிப்புண‌ர்வு இய‌க்க‌ங்க‌ளும், கொள்கை கொண்ட‌ இய‌க்க‌ங்க‌ளும், ம‌றும‌ல‌ர்ச்சி இய‌க்க‌ங்க‌ளும் இன்று தெரு தோறும், ஊர் தோறும் இய‌ங்கி வ‌ந்தாலும் அன்று விர‌ல் விட்டு எண்ண‌க்கூடிய‌ அள‌வில் இருந்து வ‌ந்த‌ இய‌க்க‌ங்களால் ம‌க்க‌ளுக்கு ஏற்ப‌டாது இருந்த குழ‌ப்ப‌ங்க‌ளும், ச‌ண்டை ச‌ச்ச‌ர‌வுக‌ளும், நீயா‍? நானா? போட்டிக‌ளும் இன்று எல்லா இட‌ங்க‌ளிலும் ம‌லிந்து காண‌ப்ப‌டுவ‌து ஏன்? குறைந்த‌ வ‌ருவாயில் அதிக‌மான‌ தேவைக‌ளை நிறைவேற்றிக்கொண்ட‌ அக்கால‌ ம‌னித‌ர்க‌ள் இன்று அதிக‌மான‌ வ‌ருவாய் இருந்தும் குறைவான‌ தேவைக‌ளையே நிறைவேற்ற‌க்கூடிய‌வ‌ர்க‌ளாக‌ இருந்து வ‌ருவ‌து ஏன்? எத்த‌னையோ ல‌ட்சோப‌ ல‌ட்ச‌ம் வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் இறைவ‌னால் உருவாக்க‌ப்ப‌ட்ட‌ இப்பூமிப்ப‌ந்தின் தென் கோடியில் இருக்கும் ப‌னிப்போர்வை போர்த்திய‌ பிர‌தேசமாம் அண்டார்டிக்கா உல‌க‌ வெப்ப‌ம‌ய‌மாத‌ல் மூல‌ம் சமீப‌ கால‌த்தில் ம‌ட்டும் உருகி வ‌ருவ‌த‌ன் காரண‌ம் என்ன‌? ப‌ல‌கோடி வ‌ருட‌ங்க‌ள் சூரிய‌னின் க‌திர்க‌ளை த‌ன்ன‌க‌த்தே ஈர்த்துக்கொண்டு அதை அப்படியே கிர‌கித்து வ‌ரும் உல‌க‌ம் இன்று ம‌ட்டும் அத‌ன் வெப்ப‌ம் அதிக‌ரித்து உல‌கை ப‌ய‌முறுத்தி வ‌ருவ‌து ஏன்? த‌ன் சொத்தின் ம‌திப்பு உலக ப‌ண‌ ம‌திப்பில் எத்த‌னை பூஜ்ஜிய‌ங்க‌ள் இருக்கும் என்று கூட‌ யூகிக்க‌ முடியாத‌ அள‌வுக்கு பெரும் செல்வ‌ங்க‌ளைக்கொண்டு வாழ்ந்து வரும் ப‌ண‌க்கார‌ர்க‌ள் ம‌த்தியில் ஒரு பூஜ்ஜியம் கூட இல்லாமல் அதற்காக அன்றாட‌ம் அல்லோல‌ப்ப‌டும் கோடான‌,கோடி ம‌க்க‌ள் இன்று உலகமெங்கும் இருந்து வ‌ருவ‌து ஏன்? எதிர்பாராம‌ல் வந்து பேரழிவை ஏற்படுத்தும் இய‌ற்கை சீற்ற‌ங்க‌ளாலும், ஆங்காங்கே நடக்கும் விமான‌ம், ர‌யில் மற்றும் த‌ரை வ‌ழி வாக‌ன‌ விப‌த்துக்க‌ளால் ம‌க்க‌ள் அன்றாடம் கொத்துக்கொத்தாக‌ கொல்ல‌ப்ப‌டுவ‌து ஏன்? கிராம‌ வாழ்க்கை ம‌ற்றும் அத‌ன் இய‌ற்கையை அனுப‌விக்க‌ ம‌ற‌ந்து ந‌க‌ர‌த்தின் மேல் தீராத‌ மோக‌ம் கொண்டு சுகாதார‌ம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அங்கு ம‌ட்டும் ம‌க்க‌ள் குவிந்து வ‌ருவ‌து ஏன்? ப‌சுமையான‌ வ‌ய‌ல்வெளிக‌ளும், அத‌ன் மேல் ப‌ட‌ர்ந்திருக்கும் வெண் கொக்குக‌ளும் இன்று த‌ரிசு நில‌மாய் ஆகி அதன் மேல் இன்று வ‌ணிக‌ நிறுவ‌ங்க‌ளும், குடியிருப்புக‌ளும் அதிகம் க‌ட்ட‌ப்ப‌ட்டு வ‌ருவ‌து ஏன்? வ‌ய‌ல் வெளியில் ம‌ட்டுமே விளைவிக்க‌ முடியும் நெல்ம‌ணியை தொழிற்சாலையில் இய‌ந்திர‌ம் கொண்டு உற்ப‌த்தி செய்து ம‌னித‌னின் உண‌வுத்தேவையை நிறைவேற்ற‌ முடியுமா? ப‌ல‌ ந‌ல்ல, நல்ல‌ திட்ட‌ங்க‌ளை ம‌க்க‌ளுக்காக‌ அவ‌ர்க‌ளின் ந‌ல‌ன்க‌ளுக்காக‌ பொது ந‌ல‌ நோக்கில் போட்டி போட்டுக்கொண்டு நிரைவேற்றி ச‌ரித்திர‌த்திலும் இட‌ம் பிடித்து எல்லோராலும் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட‌ ப‌ல‌ ந‌ல்ல‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ள் இன்று இல்லாம‌ல் போன‌து ஏன்? அன்று ஆட‌ம்ப‌ர‌ப்பொருளாக‌ தூர‌ம் வைத்து பார்த்து பேச‌ப்ப‌ட்ட‌ கார், இரு ச‌க்க‌ர‌ வாக‌ன‌ம், தொலைக்காட்சி, தொலைபேசி, மின் அடுப்பு, மின் ச‌மைப்பான், கேஸ் அடுப்பு மற்றும் குளிர்சாத‌ன‌ப்பெட்டி போன்ற‌ பொருட்க‌ள் எல்லாம் அன்றாட‌ம் ப‌ய‌ன்ப‌டுத்தாம‌ல் அக்கால‌ ம‌னித‌ர்க‌ளின் வாழ்க்கை சுமூக‌மாக‌ நக‌ர‌த்தான் செய்த‌து. ஆனால் இன்று இவைக‌ளெல்லாம் அத்தியாவ‌சிய‌ப்பொருட்க‌ளாக‌ மாறி அது இல்லாம‌ல் வாழ்க்கை ச‌க்க‌ர‌த்தை ந‌க‌ர்த்த‌ முடியாது என்று ஆகிப்போன‌து ஏன்? இய‌ற்கையாய் உருவாகி ம‌னித‌னுக்கு ப‌ய‌ன் தரும் காய்க‌றிக‌ளும், ப‌ழ‌வ‌ர்க்க‌மும், வில‌ங்குக‌ளும் இன்று ம‌ர‌ப‌ணு மூல‌ம் உருவாக்க‌ப்ப‌ட்டு ம‌க்க‌ளின் ப‌ய‌ன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சிப்பது ஏன்‌? ஒரு ப‌க்க‌ம் நவீன‌ ஆயுத‌ங்க‌ள் மூல‌ம் போர் என்று சொல்லி பொது ஜ‌ன‌ங்க‌ளை கொத்து, கொத்தாக‌ கொன்று குவித்து ம‌றுப‌க்க‌ம் விமான‌ங்க‌ள் மூல‌ம் ம‌னிதாபிமான‌ அடிப்ப‌டை என்று சொல்லி உத‌விப்பொருட்களை அனுப்பி வைப்பது ஏன்? உல‌கில் வாக‌ன‌ உற்ப‌த்தியை அதிக‌ரித்து அத‌ன் ச‌ந்தை மூல‌ம் அதிக‌ லாப‌ம் ஈட்டி, அவ்வாக‌ன‌த்தை ந‌டுத்த‌ர‌ ம‌னித‌னும், பாம‌ர‌னும் ப‌ய‌ன்ப‌டுத்தும் வ‌ண்ண‌ம் எல்லா வ‌ச‌திக‌ளையும் ஏற்ப‌டுத்திக்கொடுத்து அதை இய‌க்குவ‌த‌ற்கு தேவையான எரிபொருளைப்பெற பெட்ரோலிய‌ உற்ப‌த்தி மூல‌ம் உல‌க‌ப்ப‌ந்தை துளையிட்டு உறிஞ்சி எடுத்து பிற‌கு உல‌க‌ம் வெப்ப‌ம‌ய‌மாகி வ‌ருகிற‌து என்று கூக்குர‌லிட்டு கூட்ட‌ம் போடுவ‌து ஏன்? இவை யாவும் ந‌ம்மைப்ப‌டைத்த‌ இறைவ‌னுக்கே வெளிச்ச‌ம். என்னுள் தோன்றிய‌ இக்கேள்விக்க‌ணைக‌ள் ச‌ரியா? அல்ல‌து த‌வ‌றா? என்று தெரிய‌வில்லை. அவ்வ‌ப்பொழுது தோன்றும் இது போன்ற‌ கேள்விக‌ள் உங்க‌ளுக்கும் தோன்றி இருப்பின் நீங்க‌ள் பின்னூட்ட‌ம் மூல‌மாக‌வோ அல்ல‌து த‌னிக்க‌ட்டுரை மூல‌மாக‌வோ ப‌கிர்ந்து கொள்ள‌லாம். இன்னும் தொட‌ரும் விடைதெரியா ந‌ம் கேள்விக‌ள் இன்ஷா அல்லாஹ். வ‌ஸ்ஸ‌லாம்.. மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து ச‌வுதியிலிருந்து.

Sunday, 4 July 2010

ஈகோ எனும் "சொந்த ஆப்பு"

ஈகோ எனும் "சொந்த ஆப்பு" ஈகோ எனும் "சொந்த ஆப்பு"கொஞ்சம் விலா வாரியாக எழுத இது ஒன்றும் அவ்வளவு சின்ன சப்ஜெக்ட் அல்ல. இதில் குறிப்புகள் யார் கொடுத்தார்கள் என்று எழுதினால் அவர் யார் ? அவரது பின்புலம் குறித்து 100 வார்த்தைக்கு மிகாமல் எழுத சொல்வீர்கள் அது சரி அது என்ன விலா வாரி...தெரிந்தவர்கள் 100 வார்த்தக்கு....எப்போது நாம் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க 'ஜல்புல்'வேலை செய்கிறொமொ அப்பவே நமக்கு உரிய "ஆப்பை' தீட்ட ஆரம்பித்து விடுகிறோம். சரி இங்கு ஈகொ எங்கு வந்தது....ஆம் நம்மை கவனிக்க நாம் பிரயத்தனம் செய்கிறோமே அதுதான் அந்த சனியன். இது சின்ன வயதில் "எம்புள்ளெ அந்த மாதிரியான புள்ளெ இல்லே' என்று மனித தவறுகள் மறைக்கபடுவதிலிருந்து மரணத்தின் தருவாயில் "எப்போ என் சொல்லு கேட்காமெ பொண்டாட்டி சொல்லு கேட்டானோ அவன் என் வீட்டு நெலப்படி [ இன்னும் நெலப்படி வைத்து கட்டுகிறார்களா?] மிதிக்க கூடாது " எனும் வைராக்கியம் வரை தொடர்கிறது.இதற்க்கு காரணம் நமக்குரிய இமேஜ் ' நிரந்தரம்"எ எனும் தப்பான கணக்குதான். அப்படியெல்லாம் அது நிரந்தரம் இல்லை என்பதற்க்கு உதாரணம் இன்றைக்கு நம் தமிழ்நாட்டின் கல்வி மேம்பாட்டில் பெரும் மாறுதலை செய்த காமராஜரின் படத்தை காண்பித்து யார் என்று கேட்டால் 'தெலுங்கு சீரியலில் நடிக்கிரவரா? " என மாணவர்கள் கேட்கலாம் [ இமேஜ் நிரந்தரம்???]கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும் ஈகோ நாளடைவில் இரத்த உறவுகளை முறித்துவிடும் உயிர்க்கொல்லி என்பது நிறைய பேருக்கு தெரியாமலேயே இறந்துவிடுகிறார்கள். பெற்றோர்களும், உடன்பிறப்புகளையும் தேர்தெடுக்கும் அதிகாரம் நம்மிடம் இல்லை. நண்பனையும் , மனைவியையும் தேர்தெடுப்பதில் வேண்டுமானால் சாய்ஸ் உண்டு...அதனால்தான் இப்போது "சாய்ஸில்" செய்த தவறுக்கு நம் ஊரில் அதிகம் விவாகரத்துகள் மலிந்துவிட்டனவா?நம் ஊரில் நான் அதிகம் பார்த்த ஈகோ:வெளிநாட்டிலிருந்து வந்த என்னெ என் வீட்டில் வந்து விசாரிக்கலேநான் ஆஸ்பத்திரியில் இருக்கும்போது ஹார்லிக்ஸ்/ பழம் வாங்கி வந்து பார்க்களெநான் மாப்பிள்ளை வீட்டுக்காரன் , எனக்கு சரியான மரியாதை கொடுக்கனும்.நாங்க வசதியான குடும்பம் ...அவங்க அப்படி இல்லே.எங்க வீட்டுக்கு பொம்பலெ கூப்பாடு இல்லெ.பயணம் போகும்போது சொல்லிட்டு போகலெஇதில் சில விசயங்கள் பாசம் சார்ந்து இருந்தாலும் பெரும்பாலும் இது ஈகோவின் அடிப்படையிலேயே இயங்குகிறது. என்று [ZEN ]ஜென் தத்துவம் சொல்கிறது..இதை சரியாக உணர்ந்தவர்கள் ஆப்பரேசனுக்கு நுழையுமுன் ஸ்ட்ரெச்சரில் வைத்துகொண்டு.."உங்களுக்கு இதற்குமுன் ஏதாவது ஆப்பரேஷன் நடந்து இருக்கிறதா?..பல் கட்டியதா? அலர்ஜி இருக்கிறதா என கேட்கும்போதும் . அனெஸ்தெசிஸ்ட் "ஒன்னு , ரெண்டு” எண்ணுங்க சொல்லும்போது லேசாக தெரியும் "நாம் தனியானவன் தான் " என்றுஆனால் வார்டில் இருந்து கொண்டே குற்றப்பத்திரிக்கை வாசிப்பவர்களுக்குதான் இன்னும் ஒரு சரியான "ஈகோ மீட்டர்' கண்டுபிடிக்க மருத்துவ துறை தவறிவிட்டது.ஈகோ இப்படியெல்லாம் வளர்ந்து இப்போது சினிமாவின் ஆதிக்கத்தாலும் "நான் இந்த மாவட்டம் , நீ அந்த மாவட்டம் என்று வியாபித்து [ இந்த தமிழ் பயன்படுத்தி நாளாகிவிட்டது] இப்போது நம் ஊர்போன்ற இஸ்லாமிய மதரஸாக்கள் / பள்ளிவாசல் / நிறைந்த இடங்களில் "தெரு" 'இயக்கம்' "குடும்பம்' 'இனிசியல்" என்று புற்றுப்பிடித்திருக்கிறது.வறுமையும் , நோயும் ஈகோவை அழிக்கும் ஆயுதம்..இதில் கடுமை இருக்கிறது..நாமாக உணர்ந்து மாற்றிக்கொண்டால் எல்லோருக்கும் ஒறே மாதிரி நீதி வழங்கும் இறைவனின் கருணை இருக்கிறது.மற்றவர்களை மன்னித்து பாருங்கள் ...அதில் உள்ள சந்தோசமே தனி. ZAKIR HUSSAIN

Tuesday, 29 June 2010

மானாவாரிகள் மறைந்த மர்மம் என்ன?

இருபத்து ஒன்றாவது நூற்றாண்டில் மனித சமுதாயம் பறிகொடுத்த இயற்கைவள இழப்புகளில் இந்தியாவைப் பொருத்தவரை உடல் வளத்துக்கும், நலவாழ்வுக்கும் அடிப்படையாயிருந்தவை மானாவாரி உணவுப்பயிர்களான புஞ்சைத் தானியங்களும் பருப்புவகைப் பயிர்களும் என்றால் அது மிகை இல்லை. மணல் கொள்ளையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். மக்களுக்கு ஊட்ட உணவை விளைவித்துத்தரும் சத்தான மானாவாரி மண் இன்று கொள்ளை போவதைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க முடியாது. நாலுவழிச் சாலைகளும் எட்டுவழிச் சாலைகளும் உலக வங்கிக் கடனில் உருப்பெறுவது எவ்வளவு தூரம் தேவை என்று புரியவில்லை. நல்லுணவு விளைந்த மண்ணெல்லாம் விலை பேசி வீதி சமைக்கப்படுகிறது. மானாவாரிப் பயிர் சாகுபடி செய்து மகிழ்ந்த விவசாயிகள் வாழ்ந்த நாடு நமது பாரதம். இந்த இருபத்தி ஒன்றாவது நூற்றாண்டு இந்திய விவசாயிகள் நிலத்தை விற்பதில்கூட ஏதோ ஒரு நியாயம் உண்டு. ஆனால், மண்ணை விற்று மகிழ்வதில் என்ன நியாயம் உள்ளது? சாதாரணமாக ஒன்றும் விளையாத சுண்ணாம்பு மிகுந்த சரளை மண்ணைச் சாலை அமைக்கப் பயன்படுத்துவார்கள். இப்போது சரளை கிடைக்காமல் நன்கு பயிர் விளையக்கூடிய செவ்வல் பூமியெல்லாம் சாலையாகும் கொடுமையை எங்கு போய் முறையிடுவது? இந்தியாவில் பசுமைப்புரட்சி அறிமுகமான இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் - குறிப்பாக 1980-க்குப் பின்னர், பல வேறு காரணங்களினால் மானாவாரிகள் மறைந்தன. பிரிட்டிஷ் இந்திய ஆட்சியில் மைய வேளாண்மை அமைச்சரகம் உருவான காலகட்டத்தில் - இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் - இந்தியாவின் விளைநில வரைபடம் தயாராகிப் பயிர் மண்டலங்கள் உருவாயின. முற்றிலும் வறட்சி, பகுதி வறட்சி, பாசனம் என்று விளைநிலம் தரம் பிரிக்கப்பட்டு தட்பவெப்பம், மண்ணுக்கு ஏற்ற பயிர் என்ற அடிப்படையில் பயிர்ப்பஞ்சாங்கம் வெளியிடப்பட்டது. இந்த அடிப்படையில் வறட்சிப்பகுதிப் பயிர்களை வேறு பெயரில் சொல்வதானால் மானாவாரிப் பயிர்கள் என்று சொல்லலாம். 1951 முதல் 1970 வரை இந்தியாவின் சாகுபடித் திட்டத்தில் சுமார் 70 சதம் புஞ்சைப் பயிர்களும் பயறுவகைப் பயிர்களும் சாகுபடியாகும் மானாவாரி நிலங்களே அதிகம் இருந்தன. குறைந்த செலவில் நிறைந்த மகசூல் பெற்ற காலம் மலையேறிவிட்டது. பருவம் தவறாமல் மழையும் பெய்தது. பத்தாண்டுத் தொகுதியில் ஓராண்டு மானாவாரி ஏமாற்றி விடும். மழைப்பொழிவு குறையும் வாய்ப்பு உண்டு. பயிர் மண்டல அடிப்படையில் சுமார் 70 சதவீத நிலம் அமைந்துள்ள மானாவாரி மிகுந்த மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. பின்னர் ஆந்திர மாநிலத்தின் மேற்குப் பகுதி, கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம் அடங்கிய தக்காணப் பீடபூமி, தார்ப்பாலைவனம் அடங்கிய ராஜஸ்தானம் ஆகியவை. அத்தோடு ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களின் மாபெரும் அணைக்கட்டு வழங்கும் கால்வாய்ப் பாசனம் ஏற்படுவதற்கு முற்பட்ட சூழலில் மானாவாரிப் பயிர்களே பரவலாயிருந்தன. பயிர் மண்டலங்கள் மானாவாரி என்றும் பாசனம் என்றும் வேறுபட்டன. மானாவாரி என்பது பருவமழையை நம்பிச் செய்யப்பட்ட விவசாயம். பாசனம் என்பது உரிய பட்டத்தில் ஆறு, குளம், ஏரி, கிணறு ஆகியவற்றின் நீரையும் சேர்த்து இயங்கிய விவசாயம். உண்மையில் முற்காலப் பாசன ஆதாரங்களான ஆற்றுவெள்ளம், ஏரி, குளம் எல்லாம் பருவமழையை நம்பி இயங்கியது. இப்படிப்பட்ட பாசன நிலங்களில் நெல், கோதுமை, கரும்பு பயிராயின. அறுவடைக்குப் பின் நஞ்சையில் புஞ்சையாகப் பருப்புவகைப் பயிர்களான உளுந்து, பாசிப்பயறு, காராமணி, வேர்க்கடலை போன்றவற்றுடன் கேழ்வரகும், மக்காச்சோளமும் பயிராகும். சற்று அதிக பாசன வசதி இருப்பின் கோடைகால இறைவைப் பயிர்களாகவும் சாகுபடியாகும். மானாவாரியில் சோளம், கம்பு, சிறு தானியங்களான தினை, சாமை, பனிவரகு என்ற காடைக் கனி, வரகு, குதிரைவாலி ஆகியவற்றுடன் துவரை, கொள்ளு, கடுகு, எள் ஆகியவை பயிராகும். பசுமைப்புரட்சியின் முன்னோட்டமாக மாபெரும் அணைக்கட்டு திட்டங்கள் 1950 - 60 காலகட்டத்தில் உருப்பெற்று கால்வாய்ப் பாசனம் மானாவாரி நிலங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஒரு பகுதி புஞ்சை நிலங்கள் நஞ்சையானபோது வடமாநிலங்களில் பருப்பு சாகுபடியும், தானிய சாகுபடியும் குறிப்பாக கம்பு, இயல்பாக வளரக்கூடிய தீவனப் புற்கள் ஆகியவை மறைந்தன. நெல் சாகுபடி அறிமுகமானது. ÷வடமாநிலங்களில் பருப்பும், புஞ்சை தானியங்களும், தீவனப் புற்களும் விளைந்த இடங்களில் ஆற்று நீர்க்கால்வாய்கள் வந்ததும் நெல், கோதுமை, மக்காச்சோளம் பயிரிட்டுப் பயிர் மண்டலத் திட்டமே மாற்றப்பட்டது. பொதுவாக, இன்று நெல் விளையும் மேற்கு உ.பி., பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் மக்கள் கோதுமையையே முழு உணவாக உண்பார்கள். மலைப்பகுதிகளில் சிறப்புமிக்க பாசுமதி நெல் விளையும். உதாரணமாக,டேராடூன், சிம்லா, ஹிமாசலப் பிரதேசம், பாகிஸ்தானை ஒட்டிய சிந்து நதியின் மையப்பகுதிகளில் பாசுமதி நெல் சாகுபடி குறைந்த நீர் செலவில் பயிராகும். பிரியாணிக்கு மட்டுமே பாசுமதி அரிசி பயனாகும். அன்றாட உணவுத்திட்டத்தில் அரிசி கிடையாது. இம்மக்கள் அதிகமாகப் பருப்புவகைகளை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால், இன்று அரசின் கொள்முதல் திட்டத்துக்காக மோட்டா ரக நெல் சாகுபடி செய்வதுடன், அவர்களுக்கு நெல் முக்கிய வணிகப்பயிராகிவிட்டது. உபரி வைத்துக் கொள்ளாமல் அனைத்தையும் விற்றுவிடுவார்கள். இதனால் அங்குள்ள பயிர்த்திட்டம் மாறி புஞ்சை - மானாவாரி பலம் இழந்தது. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் 1970-வரை இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கிணறுகளில் ஏற்றம், கமலை தென்பட்டன. தமிழ்நாட்டில் நீர்ச்செலவு அதிகமுள்ள நெல்லும் கரும்பும் மெல்ல மெல்ல பழைய மானாவாரி நிலங்களை ஆக்கிரமித்தன. வடதமிழ்நாட்டில் குறிப்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஏரி நீர்ப்பாசனமும், கிணற்று நீர்ப்பாசனமும் விளங்கி வந்தன. நீர்ச் செலவுள்ள பயிர் சாகுபடித் திட்டத்தில் கரும்பும் நெல்லும் பெற்ற முக்கியத்துவத்தினால் முதலில் பம்ப் செட் வந்தது. மேல்மட்ட நீர் கிடைக்காதபட்சத்தில் ஆழ்துளைக் கிணறுகள் வந்தன. தஞ்சை மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணறுகள் அறிமுகமாயின. ஏரிநீர் ஆழ்துளைக் குழாய்களுக்கு ரீசார்ஜ் ஆனதால் மானாவாரி நிலங்களில் முன்பு பயிரான புஞ்சை தானியங்களும், பருப்பு வகைப் பயிர்களும் வழக்கொழிந்தன. மானாவாரி ஏரிகள் சுத்தமாக வறண்டு ஆக்கிரமிப்புக்கு உள்ளாயின. இந்தக் காலகட்டத்தில் மற்றுமொரு நிகழ்ச்சியும் டென்மார்க் உதவியுடன் நிகழ்ந்தது. சமூகக்காடு வளர்ப்பு என்ற போர்வையில் மானாவாரி ஏரிகளில் கருவேல மரங்களை நட்டார்கள். ஏரிகளைச் செப்பனிட்டு நீர்வரத்துப் பகுதிகளில் புற்களை வளர்த்து - நீர்வரத்துக் கால்வாய்களைத் தூரெடுத்து, ஏரிகளின் கரைகளில் மரங்களை நடுவது நல்ல திட்டம். ஆனால், முதல்கட்டமாக ஏரியிலேயே மரம் நட்டு அதன் விளைவாய் ஏரி தூர்ந்தவுடன் ப்ளாட் போட நல்ல வசதியை டென்மார்க் - டேனிஷ் ப்ராஜக்ட். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு செய்து வழிகாட்டியுள்ளது. மானாவாரி நிலங்கள் மாயமாய் மறைந்து முழுக்க முழுக்கப் பாசனத்தையே நம்பிச் செய்யப்பட்டு வரும் விவசாயத்தில் அரிசி உற்பத்தியும் சர்க்கரை உற்பத்தியும் உயர்ந்திருக்கலாம். சத்து மிகுந்த உணவு உற்பத்தி மறைந்து நோய்க்குறியுள்ள உணவு உற்பத்தி முடுக்கிவிடப்பட்டது. மூன்றாவதாக, மக்காச்சோள சாகுபடி. மிகவும் சத்து நிரம்பிய இருங்குச்சோளம், வெள்ளைச்சோளம் பயிரான நிலங்களில் இன்று மக்காச்சோளம் காட்சி தருகிறது. மக்காச்சோளம் மாட்டுக்கும் கோழிக்கும் மட்டுமல்ல. பல கலப்படங்களுக்கு வித்து. பழங்கள் விளையாத அமெரிக்காவில் சிந்தட்டிக் ஸ்க்வாஷ் பிரபலம். மக்காச்சோள மாவு ஸ்டார்ச்சில் கந்தக அமிலத்தைக் கொட்டி செயற்கைப் புரதம், சர்க்கரை சேர்த்து ஆரஞ்சு வாசனைத்தூள் தூவி ""ஜிங்கோ'', ""பிங்கோ'' என்று பெயர்வைத்து நமக்கு இறக்குமதி செய்வார்கள். அதை ஆஹா, ஓஹோவென்று அதிக விலை கொடுத்து வாங்கும் இந்திய நடுத்தர வர்க்கம் புற்றுநோயையும் இதய நோயையும் விலைகொடுத்து வாங்குகிறது. நம்மிடம் எலுமிச்சை, திராட்சை, நன்னாரி, நெல்லிக்காய், தர்பூஸ், மாம்பழம் என்று கணக்கில்லாத ரகங்கள் உள்ளனவே. மானாவாரி சாகுபடி மறைந்துவிட்டதால், துவரை, வேர்க்கடலை, உளுந்து, பாசிப்பயறு போன்ற உற்பத்தி பெருமளவு குறைந்துவிட்டது. உண்மையில் வேர்க்கடலை, பருப்புவகையாகும். அதாவது லெக்யூம்ஸ் என்பார்கள். பொதுவாக தானியப் பயிர்கள் அறுவடையானதும் லெக்யூம்ஸ் பயிர்களைச் சாகுபடி செய்துவிட்டு மீண்டும் நெல், கேப்பை, கோதுமை பயிராகும்போது 50 சதம் தழைச்சத்து செலவில்லாமல் கிட்டும். அந்த அளவில் பருப்புவகைப் பயிர்கள் காற்றில் உள்ள நைட்ரஜனை வேரில் சேமிக்கும். பருப்பு விதைகளை ரைசோபியம் நுண்ணுயிரிக் கலவையில் நேர்த்தி செய்து விதைத்தால் பருப்பு விளைச்சலும் கூடுதலாகும். நமது முன்னோர்கள் கடைப்பிடித்த பயிர்ச்சுழற்சி மானாவாரி நிலங்களில் மட்டுமல்ல, பாசன நிலங்களிலும் உண்டு. இறுதியாக ஒரு விஷயம். நம்ம ஊர்மக்கள் சாம்பார் பிரியர்களாக இருக்கலாம். சாம்பாருக்குத் துவரம்பருப்பு வேண்டும். முன்பு சாம்பாரில் கடலைமாவு கலப்படம் செய்வார்கள். கடலைமாவில்கூட பட்டாணி மாவு கலந்திருக்கும். துவரையைவிட கடலைப்பருப்பு விலை மலிவு. அதைவிடப் பட்டாணி இன்னமும் மலிவு. இப்போது கலப்படப் பருப்புகளும் விலையேறிவிட்டது. பட்டாணிமாவைவிட விலை மலிவான மக்காச்சோள மாவு கலப்படம் பெருகிவிட்டது. அது மஞ்சள் நிறத்தில் உள்ளதால் கலந்தால் தெரியாது. மாடும் மனிதனும் ஒன்றாகிவிட்ட நிலை இன்று! மக்காச்சோள மாவைத் தவிட்டுடன் பிசைந்து கறவைப்பசுக்களுக்கு வழங்குவது உண்டு. கையேந்தி பவன் தொடங்கி கந்தவிலாஸ் ஓட்டல் வரை சாம்பாரில் மக்காச்சோள மாவு கலந்திருக்கும் வாய்ப்பு உண்டு. நல்ல மணமான துவரம்பருப்பில் ருசியான சாம்பார் தினமும் வேண்டும் என்றால், மீண்டும் மானாவாரிச் சாகுபடியை ஊக்குவிப்பதுதான் வழி. இது அரசின் கடமை என்பதைப் பொறுப்புள்ள ஆட்சித் தலைவர்களும் உணர்ந்து, ஆக்கபூர்வமாக நல்ல சத்துள்ள புஞ்சைத் தானியம் மற்றும் பருப்பு சாகுபடிக்குப் புத்தூக்கம் நல்குவது, நாட்டு மக்களுக்கு நல்லது. thanks for thinamany & ஆர்.எஸ். நாராயணன்

About This Blog

shahulhameed
saudi

பிரபலமான இடுகைகள்

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP