Tuesday, 20 July 2010
கிரையோஜெனிக் ராக்கெட்
தண்ணீரை ஊற்றி ஒரு வாகனத்தை செலுத்த முடிமோ முடியாதோ - ஒரு ராக்கெட்டை இயங்கச் செய்ய முடியும். அதுதான் கிரையோஜெனிக் ராக்கெட். என்ன ஆரம்பமே குழப்பமாக உள்ளது என்று யோசனை பண்ணவேண்டாம் மேலும் படிங்கள்
நீரை ஆக்சிஜன் வாயுவாகவும், ஹைட்ரஜன் வாயுவாகவும் தனித்தனியே பிரித்து அந்த வாயுக்களைப் பயன்படுத்தி ஒரு ராக்கெட்டை இயங்கச் செய்ய முடியும். அதுதான் கிரையோஜெனிக் ராக்கெட்.
இந்தியா முதல் தடவையாக உருவாக்கியுள்ள கிரையோஜெனிக் ராக்கெட் ஏப்ரல் 15-ம் தேதி புறப்பட்டு தடம் (ரோடு எங்கே என்று கேட்ககூடாது )மாறியது வேறுவிசயம் .ஆக்சிஜன் 2 மடங்கு ஹைட்ரஜன் வாயுவும் 1 பங்கு ஆக்சிஜன் வாயுவும் ஹைட்ரஜன் வாயு தீப்பற்றி எரியக்கூடியது. அவ்விதம் எரிவதற்கு ஆக்சிஜன் வாயு உதவும் இரு வாயுக்களையும் ராக்கெட்டில் பயன்படுத்தினால் உந்து திறன் (வேகம்) அதிகரிக்கும் அதிக எடை கொண்ட ராக்கெட்களை எளிதாக மேலே தூக்கி செல்லும் ஆனால் இந்த வாயுக்களைப் பயன்படுத்தும் ராக்கெட் எஞ்சின்களை உருவாக்குவதில் நமக்கு நிறையப் பிரச்னைகள் உள்ளது
(இதில் ரஷ்யர்கள் பலே கில்லாடிகள்) என்ன பிரச்னைகள் அப்படி நம் வீட்டில் சமையல் காஸ் இருக்கிறது. அடுப்பைப் பற்ற வைத்ததும் காஸ் (வாயு) எரிகிறது. ஆனால், சிலிண்டருக்குள் இருப்பது காஸ் அல்ல. நல்ல அழுத்தத்தில் சமையல் வாயுவைத் திரவமாக்கி அந்தத் திரவத்தைத் தான் சிலிண்டரில் அடைத்திருக்கிறார்கள் ( இது நிறையபோருக்கு தெரியாது ) ஆனால், சிலிண்டருக்குள் இருப்பது காஸ் அல்ல நல்ல அழுத்தத்தில் சமையல் வாயுவைத் திரவமாக்கி அந்தத் திரவத்தைத் தான் சிலிண்டரில் அடைத்திருக்கிறார்கள். வாயு வடிவில் நமக்கு சிலிண்டர் அவருவதாக இருந்தால் வீடு கொள்ளாத அளவுக்குபெரிய சிலிண்டர் தேவைப்படும்
அடுத்து மேட்டருக்கு வருவோம் சமையல் காஸ் போலவே ஆக்சிஜன், ஹைட்ரஜன் ஆகிய இரு வாயுக்களையும் தனித்தனியே திரவமாக்கி ஹைட்ரஜனைத் ஒரு டாங்கிலும் ஆக்சிஜன் ஒரு டாங்கிலும் அடைத்து ராக்கெட் எஞ்சினில் இரு வாயுக்களையும் சேர வைத்து எரியும்படி செய்யலாம். ஆனால் ஆக்சிஜன் வாயுவை வெறும் அழுத்தத்தைப் பிரயோகித்துத் திரவமாக்க அங்கு மைனஸ் 183 செல்சியஸ் குளிர்வித்தால் தான் அது திரவ நிலையை அடையும் அது போலவே ஹைட்ரஜன் வாயுவையும் மைனஸ் 253 செல்சியஸ் குளிர் படுத்த வேண்டும் (நம் ஊர் AMK அஹ்மத் காக ஐஸ் கம்பனி எல்லாம் ஜுஜுபி )கிரையோஜெனிக் என்றால் கடும் குளிர் என்று ஒரு அர்த்தாம் உண்டு அதன் காரணமாகவே கிரையோஜெனிக் எஞ்சின் என்றும், கிரையோஜெனிக் ராக்கெட் என்றும் பெயர் வைத்துள்ளார்கள்
இந்த தொட்டிகள் மீது வெளிக்காற்று பட்டாலே போதும். இரண்டும் மிக விரைவில் ஆவியாகிவிடும் (ஆவி யாரையும் போய் பிடித்து வேப்பிலை அடிக்க சொல்லாது ) . இந்த தொட்டிகளை கடுமையான குளிரில் வைத்து இருக்க வேண்டும் ராக்கெட் செலுத்தப்படுவதற்குத் கொஞ்ச நேரதிற்கு முன்பு இந்த இரண்டு திரவங்களும் பொருத்தப்படும் இந்த திரவங்களையும் பயன்படுத்துகிற ராக்கெட் எஞ்சினை வடிவமைத்து உருவாக்குவதுதான் சிக்கலான விஷயம். ராக்கெட்டுக்குள் திரவ ஹைட்ரஜனும், திரவ ஆக்சிஜனும் அடங்கிய தொட்டிகளிலிருந்து இவை ஆவியாகிவிடாமல் குளிர்விக்க வேண்டும். அங்கிருந்து அவை இரண்டும் தனித்தனியே ராக்கெட்டின் எஞ்சின் பகுதிக்கு வந்து சேர வால்வுகள், ரெகுலேட்டர்கள், சுழல் பம்புகள் போன்ற உறுப்புகள் தேவை. சுழல் பம்பு நிமிஷத்துக்கு 42 ஆயிரம் தடவை சுழல்வதாக இருக்கும். இவையெல்லாம் விசேஷ கலப்பு உலோகத்தால் செய்யப்பட வேண்டும். ஏனெனில், கடும் குளிர் நிலையில் உலோகங்கள் ஒடிந்து விடாமல் இருக்க அதி நவீன கலப்பு உலகங்களினால் ஆனா உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படும் .
ராக்கெட்டுக்குள் கடும் குளிர்விப்பு நிலையில் திரவ வடிவில் உள்ள ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் ராக்கெட்டின் எஞ்சின் பகுதிக்கு வந்ததும் வாயுவாக மாறி ஒன்று சேர்ந்து எரியும். அப்போது 3,000 டிகிரி செல்சியஸ்( வேகாத கோழி மட்டன் இவை எல்லாம் ஒரு செகடில் பஸ்பம் ) அளவுக்குக் கடும் வெப்பம் தோன்றும். ஆகவே, இந்த வெப்பத்தைத் தாங்கி நிற்க ராக்கெட் எஞ்சின் பகுதியும் விசேஷ கலப்பு உலோகத்தால் தயாரிக்கப்படுகிறது.
விஷயத்துக்கு வருவோம் "அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்" (குர்ஆன் 6:125)
அது என்ன விண்வெளியில் பயணம் செய்பவனின் மனதை போல் சுருங்கி இருக்குமாம் நாம் இந்த பூமி இன் இலுவிசையை தாண்டினால் உடல் உறுப்புக்கள் அனைத்தும் சுருங்கிவிடும் என்பதை சுமார் 1500 வருடங்களுக்கு முன்பே இறைவன் அறிவித்துள்ளான் மனிதர்களுக்கு விண்வெளியில் பயணம் செய்யகூடிய அறிவை வழங்கிவிட்டதாக இதை நாம் எடுத்து கொள்ளலாம் அல்லவா.
நோன்பு வருகின்றது அல்லாஹ்வின் பொருத்ததை அடைவதற்காக ஜகாத்தின் மூலம் உங்களால் முடிந்த உதவிகளை வசதியற்ற உற்றார் உறவினர்களுக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் செய்திடுங்கள்.
ஆக்கம் - SHAHULHAMEED
தம்மம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment